வேண்டுமென்றே வசனம் வைக்கிறாரா நடிகர் விஜய்: படத்தை ஓட வைக்க டெக்னிக்கா?| Dinamalar

வேண்டுமென்றே வசனம் வைக்கிறாரா நடிகர் விஜய்: படத்தை ஓட வைக்க 'டெக்னிக்'கா?

Updated : ஏப் 14, 2022 | Added : ஏப் 13, 2022 | கருத்துகள் (65) | |
சென்னை : விஜய் நடித்த ‛பீஸ்ட்' படம் இன்று(ஏப்., 13) வெளியாகி உள்ள நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள ஹிந்தி மொழி தொடர்பான வசனம் வேண்டுமென்றே வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படத்தை ஓட வைப்பதற்காக ஒவ்வொரு படத்திலும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை வலிய திணிப்பதை விஜய் வழக்கமாக வைத்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. விஜய் படம் என்றாலே ஏதாவது சர்ச்சை என தொடர்
Beast, Actorvijay, Tamil, Beastmodeon,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : விஜய் நடித்த ‛பீஸ்ட்' படம் இன்று(ஏப்., 13) வெளியாகி உள்ள நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள ஹிந்தி மொழி தொடர்பான வசனம் வேண்டுமென்றே வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படத்தை ஓட வைப்பதற்காக ஒவ்வொரு படத்திலும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை வலிய திணிப்பதை விஜய் வழக்கமாக வைத்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
விஜய் படம் என்றாலே ஏதாவது சர்ச்சை என தொடர் கதையாகிவிட்டது. ஆனால் அதுவே படத்திற்கு பெரும் பப்ளிசிட்டி ஆகி விடுவதால் வேண்டுமென்றே சில சர்ச்சையான விசயங்களை திணிக்கிறார்களோ என எண்ண தோன்றுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று(ஏப்.,13) திரைக்கு வந்துள்ள படம் ‛பீஸ்ட்'. இப்படத்தின் டிரைலர் வெளியான போதே படத்தில் பயங்கரவாதிகளை முஸ்லீம்களாக சித்தரித்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கும் அளவுக்கு சென்றது.


latest tamil news
இந்நிலையில் இப்படத்தில் ஒரு வசனம் வருகிறது. காஷ்மீரில் உள்ள பயங்கரவாதியிடம் பேசும் விஜய், ‛‛உனக்கு ஒவ்வொரு முறையும் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்ய முடியாது. உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா'' என பேசுகிறார். ஏற்கனவே தமிழகத்தில் ஹிந்தி தொடர்பான சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது இவர் ஹிந்தியை எதிர்ப்பது போன்ற வசனத்தை வலிய திணித்து இருப்பதாக தெரிகிறது. இந்த வசனம் டிரெண்ட் ஆகும் அதேசமயம் தேவையின்றி சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.

இது மாதிரியான வசனம் விஜய் படத்தில் இடம் பெறுவது புதிதல்ல. ஏற்கனவே இவரது ‛மெர்சல்' படத்தில் இடம் பெற்ற ‛ஜிஎஸ்டி' தொடர்பான வசனம், ‛சர்கார்' படத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை தீயிட்டு எரிப்பது மாதிரியான காட்சி, கத்தி படத்தில் இடம் பெற்ற ‛2ஜி' ஊழல் தொடர்பான வசனம்... என சொல்லிக் கொண்டே போகலாம்.


latest tamil newsஎதிர்கால அரசியல் கனவில் இருக்கும் விஜய் எந்த ஒரு பொது பிரச்னையாக இருந்தாலும் அதற்கு நேரடியாக குரல் கொடுத்தது இல்லை. ஆனால் படங்கள் வெளியாகும் சமயத்தில் மட்டும் ஆடியோ விழாவில் ஏதாவது பரபரப்பாக பேசி, அதையே படத்திற்கு பப்ளிசிட்டியாக மாற்றிக் கொள்வார். தனது படங்களிலும் விவாதத்திற்கு உள்ளாகும் விஷயங்களை கண்டிப்பாக இடம் பெற செய்கிறார். கடந்த ஐந்தாண்டுகள் இது தொடர் கதையாகி வருகிறது. இவை எல்லாமே தனது படத்திற்கு கல்லா கட்ட பார்க்கும் விளம்பர உத்தியாக தான் பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினி இது போன்று தான் செய்து வந்தார். அவரைப்போன்று விஜய்யும் அதே ஸ்டைலை கையில் எடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X