பணம் அனுப்புங்க: வெளிநாட்டு இலங்கைவாசிகளிடம் மத்திய வங்கி கெஞ்சல்

Updated : ஏப் 13, 2022 | Added : ஏப் 13, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
கொழும்பு: உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் வாங்க, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் பணம் அனுப்ப வேண்டும் என இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கையில், கொரோனா தாக்கத்தால் சுற்றுலா வருவாய் வீழ்ச்சி அடைந்தது. இதனால் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது.இந்தப் பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, விலை
இலங்கை, பொருளாதார நெருக்கடி, பணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு: உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் வாங்க, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் பணம் அனுப்ப வேண்டும் என இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில், கொரோனா தாக்கத்தால் சுற்றுலா வருவாய் வீழ்ச்சி அடைந்தது. இதனால் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது.இந்தப் பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, விலை தாறு மாறாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் வெளிநாட்டுக் கடன்களை திரும்பச் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது.


latest tamil news




இந்நிலையில், அந்நாட்டு மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்க வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கைக்கு முக்கியமாக தேவைப்படும் அந்நிய செலாவணியை அனுப்பி, நாட்டிற்கு உதவ வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் முன்வர வேண்டும். இதற்காக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் வங்கிக்கணக்கு துவக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனுப்பும் பணமானது, உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vaiyapuriloganathan - karur,இந்தியா
14-ஏப்-202208:34:47 IST Report Abuse
vaiyapuriloganathan ஐம்பது வருடங்கள் ஆட்சி செய்த அரசியல் வாதிகள் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்க சொத்தாக மாற்றம் செய்யுங்கள்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
13-ஏப்-202219:52:07 IST Report Abuse
Sivagiri தமிழ்நாட்டு NRI-களும் அனுப்பலாம் , சீக்ரெட்-ஆ வச்சுக்குவோம் , யார் கிட்டயும் சொல்ல மாட்டோம் , வட்டி கொடுத்துடறோம்னு சொல்லிப் பாருங்க - சுவிஸ் பேங்க் , துபாய் பேங்க் - இல் இருந்து குவிந்து விடும் ,
Rate this:
Cancel
ஜான்சன் சவுதி அரேபியா - Riyadh,சவுதி அரேபியா
13-ஏப்-202219:39:21 IST Report Abuse
ஜான்சன் சவுதி அரேபியா அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X