பைசர், மாடர்னாவை விட இந்திய தடுப்பூசிகள் சிறந்தவை: சீரம் சிஇஓ

Updated : ஏப் 13, 2022 | Added : ஏப் 13, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: பைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகளை விட, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் கோவிட் வைரஸ் தொற்றுக்கு எதிராக அதிக பாதுகாப்பை வழங்கியுள்ளன என்று சீரம் நிறுவன சிஇஓ அடர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக 'கோவிஷீல்டு' தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா கூறியதாவது: பைசர் மற்றும் மாடர்னா போன்ற
Indian, COVID vaccines, MadeInIndia, Better, Pfizer, Moderna, Adar Poonawalla, SII, இந்தியா, கோவிட், தடுப்பூசி, சிறந்தவை, பைசர், மாடர்னா, சீரம், அடர் பூனாவாலா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகளை விட, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் கோவிட் வைரஸ் தொற்றுக்கு எதிராக அதிக பாதுகாப்பை வழங்கியுள்ளன என்று சீரம் நிறுவன சிஇஓ அடர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக 'கோவிஷீல்டு' தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா கூறியதாவது: பைசர் மற்றும் மாடர்னா போன்ற எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை விட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் தொற்றுக்கு எதிராக அதிக பாதுகாப்பை வழங்கியுள்ளன. பைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படாதது நல்லது. ஏனென்றால் அமெரிக்கா போன்ற நாடுகளில் 2 மற்றும் 3வது பூஸ்டர் டோஸ் எடுத்துள்ளனர். ஆனாலும் இன்னும் பலர் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.latest tamil news

ஆனால் இந்தியாவில், எங்கள் தடுப்பூசிகள் நல்ல பாதுகாப்பைக் கொடுத்துள்ளன. நாங்கள் இதுவரை 80க்குமு் மேற்பட்ட நாடுகளுக்கு 10 கோடி டோஸ்கள் கோவிஷீல்டை ஏற்றுமதி செய்துள்ளோம். தற்போது கோவிட் பாதிப்புகள் குறைந்து வருவதால், தடுப்பூசிக்கான தேவை குறைந்துள்ளது. எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி செலுத்திய சில நாடுகளில், வைரஸ் தொற்றுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்காததால், அந்த நாடுகளில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (9)

14-ஏப்-202208:22:24 IST Report Abuse
ஆரூர் ரங் லாபம் என்பது பாவமான விஷயம் கிடையாது. நம் நாட்டில் நடந்த ஏழு தடுப்பூசி முயற்சிகளில் நான்கில் மட்டுமே வெற்றி. அதிலும் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே குறிபிட்ட கால அளவுக்கு முன் தடுப்பூசியை வெளியிட்டு லாபம் பார்த்தன👌. மீதி நிறுவனங்களுக்கு பெருத்த நஷ்டம். ரிஸ்க் எடுப்பவர்களைப் பற்றி மட்டமாக எழுதினால் மற்றவர்களின் ஊக்கத்தை கெடுக்கும். ஆராய்ச்சி முன்னெடுப்புகளுக்கு ஆர்வமிருக்காது.🤔 தன்னம்பிக்கையைக் கெடுக்காதே.
Rate this:
Cancel
14-ஏப்-202202:29:34 IST Report Abuse
அப்புசாமி ஃபைசர், நார்னா தடுப்பூசிக்கும் இவரது தடுப்புய்சிக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இவரது தடுப்பூசி 1960களில் உருவாக்கப்பட்ட ரேபீஸ் தடுப்பூசி தொழில்நுட்பத்தை வைத்து உருவாக்கப்பட்டது. ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள் புதிய mRNA தொழில்நுட்பத்தை வெச்சு தயாரிக்கபட்டவை. அமெரிக்காவில் தடுப்பூசியின் மீது நம்பிக்கை வைக்காதவர்கள் பல லட்சக்கணக்கில் உள்ளார்கள். நிறைய பேர் முதல் டோஸ் கூட போடலை. ஆனா போட்டவங்களுக்கு பாதிப்பு இல்லை. அங்கே இறப்பின் எண்ணிக்கைக்கு காரணம் நிறைய பேர் தடுப்பூசி போடாதது. அங்கே தடுப்பூசி போடும்படி அறிவுறுத்தலாம்.ஆனால் வற்புறுத்த முடியாது. இங்கே மாதிரி மாநிலத்துக்கு மாநிலம் போலீசை உட்டு ரவுண்டு கட்டியடிக்கும் கலாச்சாரம் அங்கே கிடையாது. அங்கே இப்போ ரெண்டாவது பூஸ்டர் போட ரெடியாயிட்டிருக்காங்க. நாலு முறையும் ஃப்ரீ தான்.இங்கே முதலில் மலுவு விலைக்கு மத்திய அரசே வாங்கிட்டு இப்போ பூஸ்டரில் சம்பாரிச்சுக்கோங்கன்னு சொல்ற அசிங்கம் கிடையாது. பூனாவாலா நிறைய கடன் வாங்கி முதலீடு பண்ணியிருக்காரு. ஊசி விக்கலேன்னா, உக்காந்துர வேண்டியதுதான்.அதான் நம்ப தடுப்பூசி சிறந்ததுன்னு சொல்றாரு. அது தப்பில்லை. ஆனா, அமெரிக்க ஊசியைவிடச் சிறந்ததுன்னு அடிச்சு உடறது தப்பு. இப்பிடி பேசுறதை விட்டு, போலீசை உட்டு ரவுண்டு கட்டியடிச்சு ரெண்டாவது பூஸ்டரை போடச் சொல்லி வற்புறுத்தலாம். இல்லேன்னா, நம்ம மக்கள் காசு குடுத்து ஊசி போடமாட்டாங்க. எதுக்கும் பெரியவர் இருக்காரு. மீண்டும் தடுப்பூசிபூஸ்டர் இலவசமாப் போட்டு உங்களைக் காப்பாத்துவாரு.
Rate this:
14-ஏப்-202208:13:30 IST Report Abuse
ஆரூர் ரங்தவறு. மேற்குலகில் தடுப்பூசி போட்டுக் கொண்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். நம் நாட்டில் இதுவரை பொது மக்களுக்கு தடுப்பூசி கட்டாயப்படுத்தப் படுவதில்லை. இன்னும் கூட 25 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்கள் இரண்டவது தவணை போட்டுக்🤔 கொள்ளவில்லை. இலவசம் என்பதால் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக கடந்த மாதங்களில் தடுப்பூசி வீணாகியது. கிராக்கி இல்லாததால் பாரத் பயோடெக். உற்பத்தியைக் குறைத்து விட்டது. அரசின் பொறுமைக்கும் எல்லை உண்டு. இனி மாநில அரசுகள் விரும்பினால் வாங்கி இலவசமாகப் போடட்டும் . ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளட்டும்...
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
14-ஏப்-202201:39:59 IST Report Abuse
Milirvan குதிரைக்கு கண் மறைப்பான்கள் போல இந்த பகாசுர மருந்து நிறுவனங்கள், ஊடங்கங்கள் மூலம் தங்கள் இரண்டாந்தர மருந்துகளை விளம்பரப்படுத்துவது மட்டுமல்லாமல், நல்ல மருந்துகளின் மேல் சேற்றை வாரி இறைத்து இருட்டடிப்பும் (character assassination) செய்கின்றன.. எல்லாம் காசுக்காகத்தான்.. இதனை நம்பி வெள்ளைக்கார கனவான்களும் தரமானவற்றை எள்ளுவதையும், இரண்டாந்தரத்தை கொண்டாடுவதையும் கண்டிருக்கிறேன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X