பா.ஜ.,விற்கு பாடம் எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை: அண்ணாமலை

Updated : ஏப் 13, 2022 | Added : ஏப் 13, 2022 | கருத்துகள் (56) | |
Advertisement
கோவை: பா.ஜ.,விற்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ‛தமிழகத்தை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது' எனத் தெரிவித்தார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
BJP, Annamalai, Stalin, DMK, MK Stalin, Tamilnadu CM, பாஜக, பாஜ, அண்ணாமலை, ஸ்டாலின், தகுதி, திமுக, முதல்வர், தமிழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: பா.ஜ.,விற்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



தமிழக சட்டசபையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ‛தமிழகத்தை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது' எனத் தெரிவித்தார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: திராவிட இயக்கம் என்பதற்கு விளக்கம் தேவை. நானும் திராவிடன்தான். திராவிடர்கள்தான் தமிழகத்தை ஆளமுடியும். திமுக, அதிமுக வில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள்தான்.



பாஜகவுக்கு பாடம் நடத்த ஸ்டாலினுக்கு தகுதியில்லை

latest tamil news

தமிழகத்தை சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை வேண்டுமானாலும் ஏற்கலாம். ஆனால் திராவிட இயக்கம்தான் ஆளும் என்பதை ஏற்க முடியாது. பா.ஜ.,வினர் மண்ணை சார்ந்த தொழில் செய்கின்றோம். அதிமுக, திமுகவில் எவ்வளவு பேர் மண்சார்ந்த தொழில் செய்கின்றனர். துபாயில் , வெளிநாடுகளில் தான் தொழில் செய்கின்றனர். வரும் 2026ல் தமிழகத்தில் 150 தொகுதிகளை பா.ஜ., பிடிக்கும். சட்டசபையில் தேவையில்லாத விவகாரங்களை பா.ஜ.,வினர் பேசுகின்றனர் என்று சொல்வதற்கு முதல்வருக்கு என்ன தகுதி உள்ளது? பா.ஜ.,விற்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (56)

பச்சையப்பன் கோபால் புரம் ஆக ஆக ஆஹா!!! சபாஷ் சரியா சொன்னீங்க!!
Rate this:
Cancel
14-ஏப்-202206:12:54 IST Report Abuse
அப்புசாமி தமிழ் தெரிந்தவனெல்லாம் தமிழனாகி விடமுடியாது. பா.ஜ ஆளெல்லாம் தமிழக முதல்வராக முடியாது. பா.ஜ தமிழகத்தை ஆள வரும்போது வடக்கே பா.ஜ காணாம போயிருக்கும்.
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-ஏப்-202212:26:10 IST Report Abuse
Parthasarathy Badrinarayananதமிழின் பெயரால் பிழைப்பவன் எல்லாம் முதல்வராகும்போது தமிழ் தெரிந்தவன் ஆகலாம்...
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
13-ஏப்-202220:55:18 IST Report Abuse
Svs Yaadum oore காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், அம்மையப்பநல்லூர், செல்வ விநாயகர் ஆலயத்தில் உள்ள ஐயப்பன் விக்ரகங்கள் நவகிரகங்கள்,சூரியபகவான்,சனிபகவான்,ராகு, கேது பகவான், விக்ரகங்கள் இந்த மாதம் பத்தாம் தேதி அன்று இரவு சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி வந்ததிலிருந்தே பல கோவில் சிலைகள் உடைப்பு . அதற்கு இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன? .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X