வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கவுஹாத்தி: அசாமில் விஷக்காளான் சாப்பிட்ட 13 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் திப்ருகார், ஷிவசாகர், தின்சுஹியா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் காளான் சீசன் என்பதால் அங்கு காளான் விளைந்துள்ளது. இதனை பறித்துச்சென்ற வீட்டிற்கு எடுத்துச்சென்ற சிலர் கடந்த ஞாயிறன்று சமைத்து சாப்பிட்டுள்ளனர்.இதில் 35 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அசாமில் தொடரும் பரிதாபம் | Poison Mushroom | Mushroom | Assam
|
உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சாராய்தியோ மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் , திப்ருகார் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், ஷிவ்சாகர் மாவட்டத்தில் ஒருவர் என 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக , போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.