வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்.,14) கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை சித்திரை திருவிழா கோவிட் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. தற்போது கோவிட் பரவல் குறைந்ததை அடுத்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சித்திரை திருவிழா நடைபெறுகிறது. 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா ஏப்.,5ம் தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இன்று காலை 10:30 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
