2022ல் தமிழகத்தில் 7 அதிதீவிர புயல்

Added : ஏப் 15, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம்--'' 2022ல் தமிழகத்தில் 7 அதிதீவிர புயல்கள் உருவாகி கனமழை பெய்து, வெள்ளத்தில் மிதக்கும் ,''என ராமேஸ்வரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பில் தெரிவிக்கப்பட்டது.நேற்று தமிழ்ப் புத்தாண்டு விழாவை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இணை ஆணையர் பழனிக்குமார் முன்னிலையில் கோயில் குருக்கள் உதயகுமார் ஆற்காடு சீதாராமய்யர் எழுதிய பஞ்சாங்கத்தை வாசித்தார்.இதில்,
 2022ல் தமிழகத்தில்  7 அதிதீவிர புயல்

ராமேஸ்வரம்--'' 2022ல் தமிழகத்தில் 7 அதிதீவிர புயல்கள் உருவாகி கனமழை பெய்து, வெள்ளத்தில் மிதக்கும் ,''என ராமேஸ்வரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று தமிழ்ப் புத்தாண்டு விழாவை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இணை ஆணையர் பழனிக்குமார் முன்னிலையில் கோயில் குருக்கள் உதயகுமார் ஆற்காடு சீதாராமய்யர் எழுதிய பஞ்சாங்கத்தை வாசித்தார்.இதில், 'வரும் அக்., முதல் டிச., வரை 19 புயல் சின்னங்கள் உருவாகி 12 பலவீனமாகி 7 அதிதீவிர புயலாக வீசும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகையில் பல கடலோர பகுதியில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

இதனால் விவசாயம் பாதித்தாலும் தென்னை, மா, பலா, வாழை விளைச்சல் நன்றாக இருக்கும். பெட்ரோல், டீசல் விலை மேலும் உச்சத்தை தொடும். கோயில் நகைகளை அரசு உருக்கி கருவூலத்தில் பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகும்.சில அரசியல் தலைவர்கள் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை புதிய தொழிலில் முதலீடு செய்து பெரும் நஷ்டத்தை சந்திப்பார்கள்.மக்கள் வருவாய் வளர்ச்சிக்கு மேலும் இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் உருவாக கூடும். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்டு சீனா, பாகிஸ்தான் பொறாமையில் பல சூழ்ச்சிகள் செய்யும். பின் அது பயனின்றி போகும்.

எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும். வெட்டுக்கிளிகளால் கோதுமை பயிர் சேதமாகும். மின்காந்த அலைகளால் அலைபேசி டவர் சேதமாகும். இந்தியா கடல் வழியாக செல்லும் ஒரு வெளிநாடு சரக்கு கப்பல் நள்ளிரவில் தீக்கிரையாகும் அபாயம் உள்ளது. புதிய வைரஸ் பரவி மக்கள் காய்ச்சலில் பாதிக்கப்படுவர் என தெரிவித்தார்

. இதில் கோயில் கண்காணிப்பாளர் முருகன், பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி, ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், பா.ஜ., மாவட்ட பொதுசெயலாளர் சுந்தரமுருகன் பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X