பிரதோஷ வழிபாட்டுக்கு சதுரகிரியில் அனுமதி மறுப்பு

Added : ஏப் 15, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வத்திராயிருப்பு--சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாட்டுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் வேதனையுடன் திரும்பினர்.இக்கோயிலில் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஆனால் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால், பக்தர்கள் தரிசனம் செய்ய

வத்திராயிருப்பு--சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாட்டுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் வேதனையுடன் திரும்பினர்

.இக்கோயிலில் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஆனால் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால், பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி மறுத்தது.இந்நிலையில் நேற்று பல்வேறு வெளியூரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரம் வந்தனர். மழை பெய்யாத நிலையில் தங்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வனத்துறையினரிடம் கோரினர்.ஆனால் வனத்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் வேதனை அடைந்த பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி, கோயிலை நோக்கி வணங்கி சென்றனர். கோயிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு மேல் பிரதோஷ வழிபாடு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sangarapandi - coimbatore,இந்தியா
15-ஏப்-202209:49:17 IST Report Abuse
sangarapandi Government of tamil nadu take necessary steps to provide the Rope Car facility to sathuragiri maahalingam temple from peraiyur tk saptur keni area , it will help the pilgrims to prayer god with any stoppage to temple via thaniparai due to rainy seasons .And also develop the peraiyur tk .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X