நரிக்குறவர் வீட்டில் கோழிக் குழம்புடன் இட்லி, வடை சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்

Updated : ஏப் 15, 2022 | Added : ஏப் 15, 2022 | கருத்துகள் (72) | |
Advertisement
சென்னை: சென்னை திருமுல்லைவாயிலில் நரிக்குறவ மாணவியின் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் கோழிக்குழம்பு, இட்லி, வடை சாப்பிட்டார். அப்போது மாணவிக்கும் இட்லியை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.சென்னை திருமுல்லைவாயில் ஜெயாநகர் நரிக்குறவர் காலனியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, முதியோர்
நரிக்குறவர், முதல்வர், ஸ்டாலின், உணவு, இட்லி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னை திருமுல்லைவாயிலில் நரிக்குறவ மாணவியின் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் கோழிக்குழம்பு, இட்லி, வடை சாப்பிட்டார். அப்போது மாணவிக்கும் இட்லியை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

சென்னை திருமுல்லைவாயில் ஜெயாநகர் நரிக்குறவர் காலனியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, முதியோர் உதவித்தொகை, கடனுதவிகளை வழங்கிய முதல்வர் 63 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயை திறந்து வைத்தார். அங்குள்ள மக்களுடன் உரையாடிய ஸ்டாலின், அங்கிருந்தவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.

பின்னர், திவ்யா என்ற மாணவியின் வீட்டிற்கு சென்றார். ஸ்டாலினுக்கு பாசி மாலை அணிவித்தும், பூக்கொடுத்தும் மாணவியின் குடும்பத்தார் வரவேற்றனர். மாணவியின் வீட்டில் இட்லி, வடை, கோழிக்குழம்பு சாப்பிட்டதுடன் தேநீர் அருந்தினார். மேலும், மாணவிக்கு இட்லியை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

நரிக்குறவர் வீட்டில் கறிவிருந்து சாப்பிட்ட ஸ்டாலின்! காரம் அதிகம் என நெகிழ்ச்சி ......


latest tamil news


நரிக்குறவர்கள், பழங்குடியினர்கள், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு நாங்களே தேடி வந்து உதவிகளை செய்யக்கூடிய அரசாக நமது அரசு உள்ளது. திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க நமது அரசு தொடர்ந்து உழைக்கும். நரிக்குறவ மாணவியின் வீட்டில் சாப்பிட்டபோது காரமாக இருப்பதாக கூறினேன். காரமாக சாப்பிடுவதால்தான் சளி, இருமல் வருவதில்லை என நரிக்குறவர் இன சமூகத்தினர் கூறினர். நரிக்குறவ மக்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Just imagine - chennai,சீனா
16-ஏப்-202211:59:56 IST Report Abuse
Just imagine கமாண்டர்:"காக்கா தூக்கின வடை இங்க இருக்கு,வடையை தூக்கின காக்கா எங்க இருக்கு" ...... உபிக்கள்: "கமாண்டர் ஐயா,காக்கா...அந்த கறிக்குழம்புலத்தான் இருக்கு."
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
16-ஏப்-202201:09:05 IST Report Abuse
periasamy ஒரு மாநில முதல்வராக இருப்பவர் இதுபோல முன்னுதாரணமாக இருப்பது சாதி மத பேதத்தை நிச்சயம் மாற்றும்
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-ஏப்-202207:24:19 IST Report Abuse
Kasimani Baskaranபெருசு... திமுக ஒரு தரமற்ற நாடகக்கம்பெனி என்பதை நீர் அறியவேண்டும்.. அந்த மாணவர்கள் ஏற்கனவே போட்டோ ஷுட்டில் பங்கு பெற்றவர்கள்....
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
16-ஏப்-202201:02:30 IST Report Abuse
David DS அவர் போட்டுருக்கறது பாசி மாலை மாதிரி இல்லையே. சின்ன சைஸ் ருத்ராட்ச மாலை மாதிரி இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X