கர்நாடக முதல்வரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் ஈஸ்வரப்பா

Updated : ஏப் 15, 2022 | Added : ஏப் 15, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஷிவமொகா- கர்நாடகாவில், கான்ட்ராக்டர் தற்கொலை விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் ஈஸ்வரப்பா, இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.அதனை தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருக்கும் ஈஸ்வரப்பா சார்பில், அவரது மகன் 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக,
அமைச்சர் பதவி,  ராஜினாமா , ஈஸ்வரப்பா, கடிதம், கர்நாடகா, முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஷிவமொகா- கர்நாடகாவில், கான்ட்ராக்டர் தற்கொலை விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் ஈஸ்வரப்பா, இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.அதனை தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்


கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருக்கும் ஈஸ்வரப்பா சார்பில், அவரது மகன் 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக, கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் என்பவர் குற்றஞ்சாட்டினார். அவர் மீது ஈஸ்வரப்பா வழக்கு தொடர்ந்த நிலையில், 12ம் தேதி சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டார்.'என் மரணத்திற்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் காரணம்' என்று, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் அனுப்பினார்.


latest tamil news



இந்நிலையில் உடுப்பி போலீஸ் நிலையத்தில் அமைச்சர் மீது, தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஈஸ்வரப்பா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்.மீண்டும் அமைச்சராக வருவேன் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
16-ஏப்-202213:13:39 IST Report Abuse
Venugopal S பாஜக எந்த விதத்திலும் மற்ற கட்சியை விட மேலானது அல்ல. அதே போல் பாஜகவினரும் மற்ற கட்சியினரை விட மோசமானவர்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.
Rate this:
Cancel
15-ஏப்-202221:46:04 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இவருக்கு நம்ம அணிலு ஐடியா ஏதும் கொடுக்கலையா ?
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
15-ஏப்-202221:30:10 IST Report Abuse
sankar இந்த மந்திரிக்கு திருட்டு திராவிட மூஞ்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X