ஹிந்தியில் முதல்வரின் அறிவிப்பு: வட மாநிலங்களில் பிரபலமாவாரா??

Updated : ஏப் 16, 2022 | Added : ஏப் 16, 2022 | கருத்துகள் (66) | |
Advertisement
சென்னை: வட மாநிலங்களில் முதல்வர் ஸ்டாலின் புகழ் பரப்ப அவரது அறிவிப்புகள் ஹிந்தி மொழியில் அரசு சார்பில் வெளியிடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் அரசு நடவடிக்கைகளில் தனியே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதல்வரை விளம்பரப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முதல்வர்
DMK, Hindi, MK Stalin, Stalin

சென்னை: வட மாநிலங்களில் முதல்வர் ஸ்டாலின் புகழ் பரப்ப அவரது அறிவிப்புகள் ஹிந்தி மொழியில் அரசு சார்பில் வெளியிடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் அரசு நடவடிக்கைகளில் தனியே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதல்வரை விளம்பரப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலினை தேசிய தலைவராக விளம்பரப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.


இந்தியில் வெளியான ஸ்டாலின் அறிவிப்பு! இரட்டை வேடம் என விமர்சனம்

latest tamil news
சமீபத்தில் சட்டசபையில் 110 விதியின் கீழ் 'அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும்' என முதல்வர் அறிவித்தார். இது தொடர்பான செய்தி ஆங்கிலம், ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரை வட மாநிலங்களிலும் பிரபலப்படுத்தவே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. ஒருபக்கம் ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தபடியே மறுபக்கம் தங்களை ஹிந்தியில் விளம்பரப்படுத்துவது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
17-ஏப்-202207:53:15 IST Report Abuse
Venkatasubramanian krishnamurthy ஏற்கனவே இங்கு நடைபெறும் தேர்தல்களில் ஹிந்தி பேசும் மக்கள் அதிகம் வாழும் இடங்களில் அந்த மொழியில் போஸ்டர் அடிப்பவர்கள் அவர்கள். ஆனால், ஹிந்தி தெரியாது போடா/ஓடிவந்த ஹிந்தி மகளே, நாடி வந்த இடம் இதுவல்ல/ இருமொழி தான், மூன்றாவது மொழியே கூடாது என்றெல்லாம் சொல்லிவிட்டு தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள ஹிந்தியிடம் சரணடைந்திருப்பது பக்கா பச்சோந்தித்தனம். ஹிந்தியைப் பற்றி இவர்கள் பேசிய கேவலத்தனங்களை அந்த மக்களிடையே கொண்டு செல்ல மற்றவர்களுக்கு வாய்ப்பாக இது அமையும்.
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
16-ஏப்-202214:20:26 IST Report Abuse
sridhar IYOO PAAVAM NMMA VADIVELU ANNAN ORU PADATHULE SOLLUVAARU INNUMA IVANGA NAMMBALA NAMBURAANGA VIDU PORA VARA POGATTUM APPUREAM PARPOM
Rate this:
Cancel
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
16-ஏப்-202213:59:01 IST Report Abuse
Idithangi அடுத்து உதய அண்ணாவின் நடிப்பில் வந்த அணைத்து படங்களும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அணைத்து வாடா இந்திய மக்கள் மகிழ்வுறும்படி எல்லா ஹிந்தி பேசும் மாநிலங்களில் வெளியிடப்படும். பாலிவுடை மிரட்டிய உதய் அண்ணா சல்மான்கானை கதறவிட்ட உதய் இனிமேல் ஹிந்தி படஉலகம் உதய் அண்ணா வசம் என பல யுடுபே விடீயோக்கள் போடப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X