வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கோவை பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருக்கும் வானதி சீனிவாசன், கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராகவும் உள்ளார். இவருக்கு மேலும் ஒரு முக்கிய பதவி கிடைக்கும் என்கின்றனர் சீனியர் பா.ஜ., தலைவர்கள்.

பா.ஜ.,வில் அதி முக்கிய முடிவுகளை எடுப்பது கட்சியின் உயர் மட்ட குழுவான மத்திய பார்லிமென்டரி குழு. மாநில முதல்வர்களை நியமிப்பது, வேட்பாளர் பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது என பல முக்கிய முடிவுகளை இக்குழு தான் எடுக்கும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இக்குழுவில் உள்ளனர்.
இதில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே பா.ஜ., சீனியர் தலைவர்கள். இக்குழுவில் மேலும் ஒருவரை, குறிப்பாக ஒரு பெண்மணியை சிறப்பு விருந்தினராக நியமிக்க மோடி, அமித் ஷா மற்றும் கட்சியின் தேசிய தலைவர் நட்டா முடிவெடுத்துள்ளனர்.

அந்தப் பதவி நம் ஊர் வானதி சீனிவாசனுக்கு அளிக்கப்பட உள்ளதாம். சீனியர்கள் மட்டுமே உள்ள இக்குழுவில் வானதிக்கு இடம் கிடைப்பது பெரிய விஷயம் என வியக்கின்றனர் கட்சியின் மற்ற தலைவர்கள்.
விரைவில் வானதி சீனிவாசன் வட மாநிலங்களுக்கு 'டூர்' செல்வார் என சொல்லப்படுகிறது. கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக உள்ள இவர், மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போது அங்குள்ள கட்சி தொண்டர்களிடம் ஆங்கிலத்தில் உரையாட முடியாது என்பதால், ஹிந்தி கற்று வருகிறாராம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE