யோகி பாதையில் சிவ்ராஜ் சிங் சவுகான்

Updated : ஏப் 17, 2022 | Added : ஏப் 17, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று, யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வரானார். மாநிலத்தில், பா.ஜ., வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், யோகியின் முந்தைய அரசு, கிரிமினல்களின் வீடுகளை 'புல்டோசர்' வாயிலாக இடித்து தள்ளியது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதை எதிர்க்கட்சிகள் உட்பட பல அமைப்புகள் எதிர்த்தும், இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும்
யோகி, பாதை, சிவ்ராஜ் சிங் சவுகான்

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று, யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வரானார். மாநிலத்தில், பா.ஜ., வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், யோகியின் முந்தைய அரசு, கிரிமினல்களின் வீடுகளை 'புல்டோசர்' வாயிலாக இடித்து தள்ளியது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதை எதிர்க்கட்சிகள் உட்பட பல அமைப்புகள் எதிர்த்தும், இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்திய சட்டசபை தேர்தலின் போது பா.ஜ., இந்த புல்டோசர் விவகாரத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது.


latest tamil news




இந்நிலையில், யோகி பாணியை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார், மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான சிவ்ராஜ் சிங் சவுகான். சமீபத்தில், ம.பி.,யில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. கல்லெறி சம்பவத்தில் பல போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து, கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள், கடைகள் எல்லாம் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டன. 16 வீடுகள், 29 வணிக கட்டடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டவை என்கிறது ம.பி., அரசு. இந்நிலையில், மற்ற பா.ஜ., முதல்வர்களும் விரைவில் இந்த புல்டோசர் முறையை பின்பற்றுவர் என்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஏப்-202221:37:39 IST Report Abuse
அப்புசாமி ம.பி யை உ.பி ரேஞ்சுக்கு கொண்டு போயிருவாரு.
Rate this:
Cancel
... - ,
17-ஏப்-202216:50:51 IST Report Abuse
... தமிழ்நாட்டு க்கு ஒரு puldosar பார்சல்...
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-202213:39:22 IST Report Abuse
Venugopal S உத்தரப் பிரதேசத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் 40 சதவீதத்துக்கும் அதிகம். பாஜக மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதால்,இது போல் நாடகமாடித் தான் ஓட்டு வாங்க முடியும்.ஆனால் தமிழகத்தில் இந்த மாதிரி நாடகம் போட்டு வெற்றி பெற முடியாது.
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
17-ஏப்-202221:05:39 IST Report Abuse
Davamani Arumuga Gounder.. இட்டிலியும், நாட்டுக்கோழிக்கறி குழம்பும் காரமாக சாப்பிட்டால் தானே வெற்றி பெற இயலும் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X