யார் அந்த இருவர்? தமிழர்களை எம்.பி.,யாக்க மோடி திட்டம்

Updated : ஏப் 17, 2022 | Added : ஏப் 17, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
பிரதமர் மோடிக்கு எப்போதுமே தமிழகம் மீதும், தமிழ் மீதும் தனி பாசம் உண்டு. அவர் செங்கோட்டையில் கொடி ஏற்றினாலும், பார்லிமென்டில் பேசினாலும், தமிழின் பெருமைகளை சொல்லாமல் இருக்கமாட்டார். தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்தி வரும் மோடி, இப்போது ஒரு புதிய முடிவு எடுத்துள்ளாராம்.அவர் தமிழகத்திலிருந்து இரண்டு பேரை ராஜ்யசபா எம்.பி.,யாக்கப் போகிறார். தமிழக சட்டசபையில்
யார், அந்த இருவர்?, தமிழர்கள், மோடி, எம்.பி., திட்டம்

பிரதமர் மோடிக்கு எப்போதுமே தமிழகம் மீதும், தமிழ் மீதும் தனி பாசம் உண்டு. அவர் செங்கோட்டையில் கொடி ஏற்றினாலும், பார்லிமென்டில் பேசினாலும், தமிழின் பெருமைகளை சொல்லாமல் இருக்கமாட்டார். தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்தி வரும் மோடி, இப்போது ஒரு புதிய முடிவு எடுத்துள்ளாராம்.

அவர் தமிழகத்திலிருந்து இரண்டு பேரை ராஜ்யசபா எம்.பி.,யாக்கப் போகிறார். தமிழக சட்டசபையில் பா.ஜ.,விற்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ள நிலையில், இதற்கு ஒரு ஸ்பெஷல் திட்டம் வைத்துள்ளார் மோடி. ராஜ்யசபா தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, குறைந்தது 35 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவை என்றாலும், ஜனாதிபதி 12 பேரை ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கலாம் என்கிறது சட்டம். விளையாட்டு, சமூக சேவை என பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களை இப்படி எம்.பி.,யாக நியமிக்க முடியும். சச்சின் டெண்டுல்கர் உட்பட பலர் இப்படித்தான் ஜனாதிபதி நியமனம் வாயிலாக எம்.பி.,யானார்கள்.


latest tamil news




இந்த வழியைப் பின்பற்றி இரண்டு தமிழர்களை எம்.பி.,யாக்க மோடி திட்டமிட்டுள்ளார். யார் அந்த இருவர் என, பா.ஜ., வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், மோடிக்கும், அமித் ஷாவிற்கு மட்டுமே அந்த இருவரின் பெயர் தெரியுமாம்.


Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
18-ஏப்-202200:38:49 IST Report Abuse
Anbuselvan என் மனதில் தோன்றுபவர்களின் பெயர்களை குறிப்பிடுகிறேன். அதற்கு பின்னே அரசியல் காரணங்கள் உள்ளன. திரு சாலமன் பாப்பையா அவர்கள், திரு குருமூர்த்தி அவர்கள் மற்றும் திரு இளையராஜா அவர்கள். என்ன அரசியல் லாபம் என்பதை நீங்களே ஊகித்து கொள்ளலாம். அரசியல் லாபத்தை விட இவர்கள் தமிழ்நாட்டின் மீது பற்று கொண்டு இருப்பவர்கள் மற்றும் இவர்களில் ஒருவரை தவிர மற்ற இருவர் மக்களின் நாயகர்கள். நிச்சயமாக இவர்கள் மூவருமே தமிழ்நாட்டிற்காக நிச்சயம் ஏதாவது செய்வார்கள் என்பதில் ஓரளவுக்கு ஐயமில்லை.
Rate this:
Cancel
Manivasagam - Chennai,இந்தியா
17-ஏப்-202222:47:14 IST Report Abuse
Manivasagam அடிமைகள் மூலம் தமிழகத்தை சூறையாடிய கும்பலின் உருட்டு, புரட்டு வேலை...தமிழின் மீது பாசமாம்....கீழ்த்தரமான அரசியல்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-ஏப்-202202:08:58 IST Report Abuse
NicoleThomsonஇதனை சொல்வது ஒரு அடிமை அல்லவா?...
Rate this:
Cancel
Manivasagam - Chennai,இந்தியா
17-ஏப்-202222:45:54 IST Report Abuse
Manivasagam குசராத்து உருட்டு வேலையெல்லாம் தமிழக மக்கள் பார்த்த விஷயம்தான். அடிமைகள் மேல் பல நூறு ரைடுகளை நடத்தி கையில் வைத்துக்கொண்டு தமிழகத்தை சூறையாடிய கும்பல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X