இந்தியர்கள் குறித்து அவதூறு பேச்சு; அமெரிக்க பேராசிரியைக்கு எதிர்ப்பு

Updated : ஏப் 17, 2022 | Added : ஏப் 17, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
ஆசியாவைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்தியர்கள் குறித்து அவதூறாக பேசிய அமெரிக்க பேராசிரியைக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் பென்ஸில்வேனியா பல்கலையைச் சேர்ந்த பேராசிரியை ஆமி வாக்ஸ், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கறுப்பர்கள் மற்றும் அமெரிக்காவைச் சேராத மற்ற நாட்டினர்,
US Professor, India, Controversy, Indian Americans, Slam, இந்தியர்கள், அவதூறு பேச்சு, அமெரிக்க பேராசிரியை, எதிர்ப்பு

ஆசியாவைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்தியர்கள் குறித்து அவதூறாக பேசிய அமெரிக்க பேராசிரியைக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் பென்ஸில்வேனியா பல்கலையைச் சேர்ந்த பேராசிரியை ஆமி வாக்ஸ், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கறுப்பர்கள் மற்றும் அமெரிக்காவைச் சேராத மற்ற நாட்டினர், அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளதாக கூறி வருகின்றனர். ஆசியாவைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்தியர்களுக்கு இந்த மனப்போக்கு உள்ளது.


latest tamil news



இந்தியாவைச் சேர்ந்த பிராமணர்களுக்கு, மற்றவர்களைவிட தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் உள்ளது. பல்வேறு துறைகளில், இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் சிறப்பாக செயல்படுவதால், அவர்களுக்கு ஆத்திரம். இதை அவமானமாக கருதுகின்றனர். அதனாலேயே அமெரிக்கர்களை மட்டம் தட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அவருடைய இந்த பேச்சுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பார்லிமென்ட் எம்.பி.,யான இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர், ஆமி வாக்சின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-ஏப்-202202:06:10 IST Report Abuse
NicoleThomson ஒரு வேலை இவரு தமிழகம் வந்து சென்றிருப்பாரோ? சரி சரி அமேரிக்கா எனும் தீவிரவாத நாட்டினை சேர்ந்த இந்த பெண்ணும் அப்படி பட்டவளாக தான் இருக்கவேண்டும்
Rate this:
Cancel
Venkatramani.V - Mumbai,இந்தியா
19-ஏப்-202207:32:10 IST Report Abuse
Venkatramani.V அமெரிக்கர்களைப் பார்த்து பிராமணர்களை விடுங்கள், எந்த இந்தியனும் பொறாமைப் படவில்லை என்பதே உண்மை. அதேநேரம் காலவரைக்குட்பட்டு ஒதுக்கீடுகள் வழங்க எண்ணித் துவங்கிய திட்டம் நிரந்தரமாகிப் போனதுவும் பிராமண சமூகத்தின்பால் வெறுப்பினை எல்லார் மனதிலும் விதைத்து வளர்த்து மரமாகிப் போனதுவும் வேதனையே. இந்த அம்மையாரின் கூற்று அமெரிக்கர்கள் மனதில் திறமையான இந்தியர்களிடம் தோற்று விடுவோமோ எனும் அச்சத்தின் வெளிப்பாடாகக் காண்கிறது.
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
18-ஏப்-202211:16:55 IST Report Abuse
Venugopal S பின்ன, இப்படி பொசுக்கென்று உண்மையைச் சொன்னால் எங்களுக்குக் கோபம் வராதா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X