இளையராஜாவை அவமானப்படுத்துவதா?: ஜே.பி.நட்டா கண்டனம்

Updated : ஏப் 18, 2022 | Added : ஏப் 18, 2022 | கருத்துகள் (109) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்த நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், ‛பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து
Ilayaraja, BJP, Nadda, இளையராஜா, பாஜக, நட்டா, ஆதரவு,

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்த நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், ‛பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.


இளையராஜாவை அவமதிப்பதா? ஜே.பி.நட்டா கண்டனம் | BJP JP Nadda | Ilaiyaraja | Dinamalar

latest tamil newsஇளையராஜாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பலரும் அவருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதேநேரத்தில் தமிழக பா.ஜ.,வினர் இளையராஜாவின் கருத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவரது கருத்துகளை வாபஸ் பெற வேண்டும் என ஒருதரப்பினர் வலியுறுத்தினர். ஆனால், தன் கருத்தை திரும்பப் பெற மாட்டார் என இளையராஜா கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்தார்.


latest tamil news


இந்த நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஆளும் தரப்புக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை குறிவைத்து கருத்துகளால் தாக்குகின்றனர். தங்களுக்கு சாதகமாக பேசவில்லை என்பதற்காக இசைமேதையை அவமதிப்பது சரியான அணுகுமுறை கிடையாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொள்கைகள், பார்வைகள் இருக்கும். தங்களுக்கு மட்டுமே ஒத்தூத வேண்டும் என நினைப்பது, வலியுறுத்துவது எப்படி சரியான ஜனநாயகமாகும்?. இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நெல்லை ரமணி - திருநெல்வேலி ,இந்தியா
18-ஏப்-202219:21:08 IST Report Abuse
 நெல்லை ரமணி  இளையராஜா " உனக்கு இசையைப்பற்றி என்ன தெரியும் ? " ன்னு நிறைய பேரிடம் ஆணவத்தோடு கேட்டதுண்டு. அவரது இசை திறமைக்ககாக அதையெல்லாம் எல்லோரும் பொறுத்துக் கொண்டதுண்டு. இப்போது அவரிடம் " இசையை தவிர உங்களுக்கு என்ன தெரியுமும்ன்னு" அவரை பார்த்து கேட்கவேண்டியுள்ளது. இசையிலும், ஆணவத்திலும் உச்சம் தொட்ட இளையராஜா நல்ல மனிதனாக வாழ்ந்ததாக தெரியவில்லை.இவரால் வஞ்சம் தீர்க்கப் பட்டவர்கள் ஏராளம்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
19-ஏப்-202208:51:23 IST Report Abuse
sankarநீங்கள் மோடி அவர்களைப்பற்றி மக்களிடம் சொல்லியிருக்கும் பொய்கள் - மாயத்திரை விலகுகிறது - என்கிற ஒரு விரக்தி தெரிகிறது - அதுசரி - இந்த விமரிசனத்துக்கும் - அவரது இசைக்கும் என்ன சம்பந்தம் சார்...
Rate this:
Cancel
18-ஏப்-202219:12:32 IST Report Abuse
பேசும் தமிழன் பண்ணைபுரத்து தங்கம் ...உண்மையை உரக்க பேசும் சிங்கம் தமிழன் இல்லை ...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஏப்-202217:37:23 IST Report Abuse
Kasimani Baskaran தமிழக முதல்வர் சட்டசபையில் குப்புற விழுந்து கெஞ்சாத குறையாக கவர்னருக்கும் எங்களுக்கும் ஒன்றும் இல்லை என்று 110ல் அறிக்கை விடுகிறார்கள் - ஆனால் இந்த திராவிட மாயையில் சிக்கி சின்னாபின்னமான அடிமைக்கூட்டம் மட்டும் இளையராஜாவை காய்ச்சுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X