மாதவம் செய்த மாதவன்... நீச்சலில் தங்கம் வென்ற மகன்

Updated : ஏப் 18, 2022 | Added : ஏப் 18, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
கோபன்ஹேகன்: டென்மார்க் நீச்சல் போட்டியில் இந்தியாவின் வேதாந்த் (800 மீ., 'பிரீஸ்டைல்') தங்கம் வென்றார்.டென்மார்க்கில், சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 800 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் 16, பங்கேற்றார். பந்தய துாரத்தை 8 நிமிடம், 17.28 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த வேதாந்த், தங்கப் பதக்கத்தை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோபன்ஹேகன்: டென்மார்க் நீச்சல் போட்டியில் இந்தியாவின் வேதாந்த் (800 மீ., 'பிரீஸ்டைல்') தங்கம் வென்றார்.



latest tamil news


டென்மார்க்கில், சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 800 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் 16, பங்கேற்றார். பந்தய துாரத்தை 8 நிமிடம், 17.28 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த வேதாந்த், தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, இத்தொடரில் இவரது 2வது பதக்கம். ஏற்கனவே 1500 மீ., 'பிரீஸ்டைல்' போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். தவிர இவர், 200 மீ., 'பிரீஸ்டைல்' போட்டியில் 12வது இடம் பிடித்திருந்தார்.


latest tamil news


ஆண்களுக்கான 100 மீ., 'பட்டர்பிளை', 'ஏ' பிரிவு பைனலில் இலக்கை 54.24 வினாடியில் கடந்த இந்தியாவின் சஜன் பிரகாஷ், 5வது இடம் பிடித்தார். இவர், இத்தொடரின் 200 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் தங்கம் வென்றிருந்தார். மற்றொரு இந்திய வீரர் தனிஷ் ஜார்ஜ் மாத்யூ, 'சி' பிரிவு பைனலில் பந்தய துாரத்தை 56.44 வினாடியில் கடந்து, முதலிடம் பிடித்தார்.

பெண்களுக்கான 200 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இலக்கை 2 நிமிடம், 14.27 வினாடியில் கடந்த இந்தியாவின் ஷக்தி பாலகிருஷ்ணன், 34வது இடத்தை கைப்பற்றினார்.இத்தொடரில் இந்தியாவுக்கு இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி என மூன்று பதக்கம் கிடைத்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பைரவர் சம்பத் குமார் 1).வாழ்த்துக்கள் திரு. வேதாந்த் அவர்களுக்கு.மேன்மேலும் புகழ்பெற்று திகழ மனமார்ந்த வாழ்த்துக்கள். 2).திரு. மாதவன் தான் இன்னாருக்கு தந்தை என சொல்லி பெருமை கொள்ளலாம். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் இதெல்லாம் ஈஎன்னய்யா பதக்கம். எங்கள் மரத்தமிழன் இன்பாண்ணா வைரம் பிளாட்டினம் பதக்கங்கள் வென்று வெற்றி வாகை சூடி வருவார் பாருங்கள்!!!.
Rate this:
Cancel
19-ஏப்-202211:02:44 IST Report Abuse
ஆரூர் ரங் பரம்பரை குலத் தொழிலாக சினிமாவிலேயே இறக்காமல் இது போன்று ஊக்கம் தருவது👌 சிறப்பு. முன்பு நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா மற்றும் ஜெயவந்த்குமார் ஆகிய இருவருமே நீச்சல் வீரர், வீராங்கனைகள்.ஜெயவீணா, நேபாளில் நடைபெற்ற 13 வது, தெற்கு ஆசிய, பிரேஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில், 50 மீட்டர் நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தவர் .🖐 வாழ்த்துகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X