கவர்னரின் பட்டமளிப்பு விழா: அமைச்சர்கள் புறக்கணிப்பு

Updated : ஏப் 19, 2022 | Added : ஏப் 19, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ரவி, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். விழாவை, தமிழக அமைச்சர்கள் புறக்கணித்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக சாஸ்திரி அரங்கில், 84 வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ரவி பட்டங்கள் வழங்கினார். நேரடியாக பயின்ற 1,235 மாணவ - மாணவியர், தொலைதுார கல்வி
Governor, RN Ravi, Annamalai University

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ரவி, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். விழாவை, தமிழக அமைச்சர்கள் புறக்கணித்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக சாஸ்திரி அரங்கில், 84 வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ரவி பட்டங்கள் வழங்கினார். நேரடியாக பயின்ற 1,235 மாணவ - மாணவியர், தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் படித்த 1 லட்சத்து 23 ஆயிரத்து 936 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் பங்கேற்க, ஒரு நாள் முன்னதாக சிதம்பரத்திற்கு கவர்னர் ரவி வந்தார். பல்கலையில், பல்வேறு துறைகளில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்றார். நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில், மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். விழாவில் பல்கலை இணை வேந்தரான, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.


latest tamil news


சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார், அண்ணாமலை நகர் பேரூராட்சி சேர்மன் பழனி உட்பட முக்கிய பொறுப்புகளில் உள்ள தி.மு.க.,வினரும் பங்கேற்கவில்லை.விழா மேடையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கிய இடத்தில், உயர்கல்வித் துறைச் செயலர் கார்த்திகேயன் அமர்ந்திருந்தார்.

'சட்டசபை நடந்து வருவதால் அமைச்சர்கள் வர இயலவில்லை' என்றும், 'கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமைச்சர்கள் பங்கேற்கவில்லை' என்றும் இருவேறு தகவல்கள் உலா வந்தன.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamaraj jawahar - CA,யூ.எஸ்.ஏ
25-ஏப்-202210:06:20 IST Report Abuse
kamaraj jawahar சங்கிகள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. தயவு செய்து கவனிக்கவும்
Rate this:
Cancel
Mayuram Swaminathan - Chennai,இந்தியா
20-ஏப்-202211:45:57 IST Report Abuse
Mayuram Swaminathan பட்டமளிப்பு விழாவில் இணை வேந்தர் வராதது சிறுபிள்ளைத்தனமானது
Rate this:
Cancel
19-ஏப்-202211:43:36 IST Report Abuse
அக்கப்போர் யாரு வந்தாலும், வராவிட்டாலும் நடப்பது நடந்தே தீரும். எப்படியெல்லாம் எங்கள் ஹிந்து கடவுள்கள் தீய மற்றும் தேச துரோகிகளை தங்கள் உருக்குல் சேர்ப்பதில்லை பாருங்கள் மக்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X