யாராலும் திருட முடியாத சொத்து கல்வி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Updated : ஏப் 19, 2022 | Added : ஏப் 19, 2022 | கருத்துகள் (55) | |
Advertisement
சென்னை: ‛யாராலும் திருட முடியாத சொத்து உண்டு என்றால் அது கல்வி மட்டுமே' என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கானத் திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்.,19) துவக்கி வைத்தார். மேலும் இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை
Tamilnadu CM, Stalin, Education, DMK, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், பள்ளிக்கல்வி, கல்வி, சொத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ‛யாராலும் திருட முடியாத சொத்து உண்டு என்றால் அது கல்வி மட்டுமே' என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கானத் திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்.,19) துவக்கி வைத்தார். மேலும் இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 'நம் பள்ளி நம் பெருமை' என பிரசார வாகனங்களையும் முதல்வர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: யாராலும் திருட முடியாத சொத்து உண்டு என்றால் அது கல்வி மட்டுமே. அதனால்தான் பள்ளிக் கல்விக்கு இந்த அரசு மிகமிக முக்கியத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.


latest tamil news


மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சிந்தனை ஒரு நேர்கோட்டில் இருந்தால்தான் கல்வி எனும் நீரோடை சீராக செல்ல முடியும். இதில் எவர் தடை போட்டாலும் தடம்புரண்டுவிடும். குழந்தைகளுக்கு பெற்றோர் வழிகாட்ட வேண்டும். பெற்றோரின் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க வேண்டாம். கல்விக்கு மிகமிக முக்கத்துவத்தை தமிழக அரசு கொடுத்து வருகிறது. குழந்தைகளின் கல்வி என்பது சமூக எதிர்காலத்தின் அடித்தளம். அவர்களுக்கு அளிக்கக்கூடிய தரமான கல்விதான் சமுதாய முன்னேற்றத்தினுடைய திரவுகோல். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கல்வியைக் கற்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதுதான் நமது அரசினுடைய நோக்கம், குறிக்கோள், லட்சியம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
19-ஏப்-202223:22:05 IST Report Abuse
மிளிர்வன் விங்ஞான திருடனுவோ திருட முடியாததையும் திருடிபுடுவானுங்கோ.. வாய்ப்பை மறுப்பதின் மூலம்.. அதை பனஹத்துக்கு விற்பதன்மூலம்..
Rate this:
Cancel
Madurai Ravi - Tamilnadu,இந்தியா
19-ஏப்-202222:43:11 IST Report Abuse
Madurai Ravi அடடா, நோட் பண்ணிங்கப்பா... இத்தனை நாள் இது தெரியாம போச்சே........
Rate this:
Cancel
19-ஏப்-202222:31:30 IST Report Abuse
theruvasagan கல்வியை திருட முடியாது. ஆனால் கல்வி கற்கும் ஆர்வத்துடன் வருவோரிடமிருந்து நன்கொடை கேபிடேஷன் பீஸ் அப்படி இப்படி என்று கல்வித் தொந்தைகள் பணத்தை பறிக்க முடியும். அது திருட்டு கீழ வராது. அதுக்குத்தான் நீட் வேண்டாங்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X