வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடந்த 8 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட தவறிவிட்டார் என பா.ஜ., எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடி அரசை அவ்வபோது விமர்சித்து வந்தார். இது அக்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் பொருளாதார வளர்ச்சி குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது: கடந்த 8 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட தவறிவிட்டார்.

நாட்டின் வளர்ச்சி 2016ம் ஆண்டில் இருந்து சரிந்து கொண்டே செல்கிறது. தேசிய பாதுகாப்பு மிகவும் பலவீனமாக இருக்கிறது. சீனாவைப்பற்றி புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் பிரதமர். நாடு இப்பிரச்னையில் இருந்து மீள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எப்படி என்று அவருக்கு தெரியுமா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.