இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி

Updated : ஏப் 19, 2022 | Added : ஏப் 19, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.'புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள, 'அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்' என்ற நுாலுக்கு, இளையராஜா அணிந்துரை எழுதியுள்ளார். அதில், 'மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள், திட்டங்கள்
Ilayaraja,Modi,Ambedkar,Narendra Modi,நரேந்திர மோடி,மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.



'புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள, 'அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்' என்ற நுாலுக்கு, இளையராஜா அணிந்துரை எழுதியுள்ளார். அதில், 'மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள், திட்டங்கள் வாயிலாக, பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு, அம்பேத்கரே பெருமைப்படுவார்' என கூறியதோடு, அம்பேத்கரையும், மோடியையும் ஒப்பிட்டு பாராட்டியிருந்தார்.



இதனால், அதிர்ச்சி அடைந்த தி.மு.க.,வினரும், அவர்களது ஆதரவாளர்களும், இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கடிதம் எழுதியிருந்தார். இளையராஜாவை விமர்சிப்பது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.,வினருக்கு தடை விதித்துள்ளார். ஆனாலும், இளையராஜா மீதான கடும் விமர்சனத்தை, தி.மு.க., ஆதரவாளர்கள் தொடர்கின்றனர்.


latest tamil news


இந்நிலையில், இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அம்பேத்கர் குறித்தும், அவரின் சிந்தனைகளை செயல்படுத்தி வருவது குறித்தும், பிரதமர் மோடி அடிக்கடி பேசி வருகிறார். இந்நிலையில், இளையராஜா பாராட்டியதால், மோடி மகிழ்ச்சி அடைந்துள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

நல்லவன் - chennai,இந்தியா
22-ஏப்-202214:11:47 IST Report Abuse
நல்லவன் உங்களுடைய இசை மருந்தை நுகர்பவன் இந்த நல்லவன். இருந்தாலும், இந்த உள்நோக்கமுடைய உங்களுடைய விளம்பர விமர்ச்சனம் எடுபடாது - ஒரு வேலை பட்டெல்ன்னு சொல்லி இருந்ததால் வாய்ப்பிருந்திருக்கும்.
Rate this:
Cancel
sugumar s - CHENNAI,இந்தியா
21-ஏப்-202214:14:57 IST Report Abuse
sugumar s As eleyaraja is impressed he praised. what is wrong?? only opposition party people are objecting
Rate this:
Cancel
H அண்ணாமலை ராஜா - Theni,இந்தியா
21-ஏப்-202212:50:56 IST Report Abuse
 H அண்ணாமலை ராஜா நன்றி மோடி ஜீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X