டில்லியில் நடந்த கலவரம் குற்றவாளிகளிடம் விசாரணை

Added : ஏப் 19, 2022 | |
Advertisement
புதுடில்லி : டில்லியில், சமீபத்தில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, பெண் உட்பட 24 பேர் கைதாகி உள்ளனர். கலவரத்தில் முக்கிய பங்காற்றிய இருவரை, போலீசார் விசாரிக்கின்றனர்.பிரபல ரவுடிடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜஹாங்கிர்புரியில், சமீபத்தில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில், ஒரு சமூகத்தினர் கல்
 டில்லியில் நடந்த கலவரம் குற்றவாளிகளிடம் விசாரணை

புதுடில்லி : டில்லியில், சமீபத்தில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, பெண் உட்பட 24 பேர் கைதாகி உள்ளனர். கலவரத்தில் முக்கிய பங்காற்றிய இருவரை, போலீசார் விசாரிக்கின்றனர்.

பிரபல ரவுடிடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜஹாங்கிர்புரியில், சமீபத்தில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில், ஒரு சமூகத்தினர் கல் வீச்சில் ஈடுபட்டதால், பெரும் கலவரம் உருவானது.

இதில், கோவில், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. எட்டு போலீசார் உட்பட ஒன்பது பேர் காயம் அடைந்தனர். கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இரு சமூகத்தினரையும் சேர்ந்த ஒரு பெண், இரு சிறார் உட்பட, 23 பேரை கைது செய்தனர்.

கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சோனு சிக்னா யூனுஸ் என்பவரை கைது செய்ய சென்ற போலீசார் மீது, அவரது குடும்பத்தினர் கல் வீச்சில் ஈடுபட்டனர். பின், சோனு சிக்னா கைதானார். நேற்று, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

ஏற்கனவே கைதானவர்களில், அன்சார், அஸ்லாம் ஆகியோரை காவலில் எடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில், அஸ்லாமிடம் பிரபல ரவுடி ஒருவர் துப்பாக்கி வழங்கியது உறுதியாகி உள்ளது. ஜஹாங்கிர்புரி ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தலா ஒரு கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.


அறிக்கை தாக்கல்

இதற்கிடையே, கலவரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, டில்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டு இருந்தார்.இதன்படி, இதுவரை மேற்கொண்ட ஒட்டுமொத்த நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை, உள்துறை அமைச்சகத்திடம் போலீசார் தாக்கல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X