கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை

Updated : ஏப் 21, 2022 | Added : ஏப் 21, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக, அவரது தோழி சசிகலாவிடம், சென்னையில் இன்று(ஏப்.,21) வாக்குமூலம் பெற்றனர். இவ்வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் உள்ளதால், மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையிலான போலீசார், சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிச., 5ல் இறந்தார். அவருக்கு நீலகிரி
Sasikala, Kodanad case, Kodanad estate

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக, அவரது தோழி சசிகலாவிடம், சென்னையில் இன்று(ஏப்.,21) வாக்குமூலம் பெற்றனர். இவ்வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் உள்ளதால், மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையிலான போலீசார், சசிகலாவிடம் விசாரணை நடத்தினர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிச., 5ல் இறந்தார். அவருக்கு நீலகிரி மாவட்டம், கோடநாடு பகுதியில் பங்களா உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், இந்த பங்களா, அவரது தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. கூலிப் படைஇந்நிலையில், 2017 ஏப்., 23ல், கோடநாடு பங்களாவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, கொள்ளையில் ஈடுபட்டனர். தடுக்க முயன்ற காவலாளி ஓம் பகதுார், 57, என்பவர் கொல்லப்பட்டார்; மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதுார், 37, என்பவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

கோடநாடு வழக்கு சசிகலாவிடம் தனிப்படை விசாரணை

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக இருந்த, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ், 36, என்பவரை தேடினர். இவர், திடீரென சாலை விபத்தில் பலியானார். தொடர் விசாரணையில், கோடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கூலிப் படையினர் சயான், 36, வாளையார் மனோஜ், 42, உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கேரள மாநிலம், திருச்சூர் அருகே, குடும்பத்துடன் காரில் சென்றபோது, கன்டெய்னர் லாரி மோதியதில், சயான் படுகாயத்துடன் தப்பினார். ஆனால், அவரது மனைவி வினு பிரியா, 31, மகள் நீது, 6, ஆகியோர் பலியாகினர்.

அதேபோல், கோடநாடு பங்களாவில், கணினி இயக்குனராக பணிபுரிந்த, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே, கெங்கரையைச் சேர்ந்த தினேஷ்குமார், 29, என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.


மர்ம முடிச்சுகள்


இப்படி அடுத்தடுத்த மரணங்களால், கோடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விழுந்த மர்ம முடிச்சுகளுக்கு விடை தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கைதாகி ஜாமினில் வெளிவந்த சயான், மனோஜ் ஆகியோர், 2019ல், டில்லியில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், 'கோடநாடு கொலை, கொள்ளையில், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது' என குற்றம் சாட்டினர். இது, மேலும் மர்மத்தை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு குறித்து, தற்போது கோவையில் உள்ள, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் ஆறு மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.வீடியோ பதிவு


முன்னதாக, சசிகலாவின் உறவினர் விவேக், கோடநாடு பங்களாவின் மேலாளர் நடராஜன் ஆகியோரிடமும் விசாரித்தனர்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உறவினர் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கியுள்ள சசிகலாவிடம், ஐ.ஜி., சுதாகர் தலைமையில், நீலகிரி எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், இன்று விசாரணை நடத்தினர். விசாரணை மாலை வரை நடந்தது. அதற்காக, 100க்கும் மேற்பட்ட கேள்விகள் தயாரித்திருந்தனர்.


வரும் 24ம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவுகோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், எட்டு பேர் ஜாமினில் வந்துள்ளனர். சயான், மனோஜ் மற்றும் கனகராஜ் அண்ணன் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோர், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை, இம்மாதம் 24ம் தேதியுடன், ஐந்து ஆண்டுகளை கடக்கும் நிலையில் உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
21-ஏப்-202215:43:12 IST Report Abuse
sankaseshan ஆறுமுக சாமி கமிசனால் ஒரு தீர்வும் வராது.. மக்களின் பணம் தண்டம் ஆறுமுக சாமிக்கு பொழுது போகிறது திருடர்கள் அதிமுகவை கலாய்கிறார்கள்
Rate this:
Cancel
Gopal - Chennai,இந்தியா
21-ஏப்-202215:35:14 IST Report Abuse
Gopal கொடநாட்டில் பல அப்பாவிகளை கொலை செய்து பல ஆயிரம் கோடி சொத்து பத்திரங்கள்,பல ஆயிரம் கோடி பணத்தை திருடிக்கொண்டுபோன எடப்பாடியை ஏன் இதுவரை விசாரணை செய்யவில்லை. சசியிடம் விசாரணை செய்து அங்கே இருந்தவற்றின் விபரங்களை தெரிந்துகொண்டபின் அடிபொடியானிடம் விசாரணை நடக்குமோ...
Rate this:
Cancel
21-ஏப்-202214:27:25 IST Report Abuse
ஆரூர் ரங் கருணா ஆசீர்வாதம் செய்து தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து கொண்டவர். அவரது விஞ்ஞான😉😉 வழியில் அயராதுழைத்து தப்பித்து விடுவாரா?
Rate this:
Gopal - Chennai,இந்தியா
21-ஏப்-202215:24:06 IST Report Abuse
Gopalஉன்னோட எஜமானன் எடப்பாடியான் செய்த கொலை கொள்ளைடா......
Rate this:
Manivasagam - Chennai,இந்தியா
21-ஏப்-202217:44:29 IST Report Abuse
Manivasagamஉன்னோட எடப்பாடியார் விரைவில் உள்ளே போவார்...நீ அவருக்கு சாப்பாடு கொண்டுபோய் கொடுப்பே......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X