வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ‛போதிதர்மரின் மரபணுவில் இருந்து வந்தவர் தான் முதல்வர் ஸ்டாலின்' என சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
சட்டசபை காங்., தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்வபெருந்தகை சட்டசபை கூட்டத்தொடரில் பேசியதாவது: தமிழக முதல்வர் கட்சியிலும், ஆட்சியிலும் எடுத்துக்காட்டாக இருப்பது போல் உடல் வலிமை, உள்ளம் வலிமையிலும் ஒரு எடுத்துக்காட்டாக தமிழக மக்களுக்கு காட்சியளிக்கின்றார்.
உடல், உள்ளம் வலிமையில் இருந்து தான் அறிவுத்திறன் அதிகரிக்கிறது. காங்., எம்.பி., ராகுல், முதல்வரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகையில் என்னிடம் ஸ்டாலினின் வயது குறித்து நம்பவே முடியவில்லை எனக் கூறினார்.

அவரிடம் முதல்வர் தினமும் சைக்கிள் ஓட்டுவதாக கூறினேன். அதற்கு அடுத்தமுறை வரும்போது ஸ்டாலினுடன் சேர்ந்து நானும் சைக்கிள் ஓட்ட விரும்புகிறேன் என முதல்வரிடமே ராகுல் நேரடியாக கோரினார். தமிழகத்தில் பிறந்த போதிதர்மர் உலகம் முழுவதும் விளையாட்டையும், தற்காப்பையும் சொல்லிக்கொடுத்தவர். அவர் இல்லையென்றால் மேலை நாடுகளில் விளையாட்டும், தற்காப்பு கலையும் விரிவடைந்திருக்காது. போதிதர்மரின் மரபணுவில் இருந்து வந்தவர் தான் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.