திமுக அரசின் தவறான முடிவுகளால் மின்வெட்டு: பழனிசாமி தாக்கு

Updated : ஏப் 22, 2022 | Added : ஏப் 22, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை: தி.மு.க., அரசின் தவறான முடிவுகளால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தொடர் முன்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். தமிழகத்திற்கு 17,100 மெ.வா., வரை மின்சாரம்
திமுக, தமிழக அரசு, மின்வெட்டு, எடப்பாடி பழனிசாமி, பழனிசாமி, இபிஎஸ்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தி.மு.க., அரசின் தவறான முடிவுகளால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.



சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தொடர் முன்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். தமிழகத்திற்கு 17,100 மெ.வா., வரை மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 13,100 மெ.வா., மின்உற்பத்தியாகிறது. இதற்கு, தமிழக அரசு, மின்வாரியம் தேவையான நிலக்கரியை கொள்முதல் செய்யாததாலும், மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி கிடைக்காத காரணத்தினால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் தவறான முடிவுகள் தான் காரணம். கோடை காலம் வரும் போது மின்சாரம் தேவை அதிகரிக்கும். இந்த முன்யோசனையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.



மின்வெட்டுக்கு காரணம் முன்யோசனை இல்லாததுதான்

latest tamil news

அதிமுக ஆட்சி காலத்தில் போதிய அளவு மின்சாரம் இருப்பு வைத்திருந்தோம். கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் உற்பத்தி செய்து வழங்கினோம். கோடை காலத்தில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக இருந்தது. கடந்த 2006 -11 திமுக ஆட்சியில் மின்வெட்டு நிலவியது. திறமையில்லாத ஆட்சியால் முறையாக மின்சாரம் வழங்கப்படவில்லை. தடையில்லா மின்சாரம் வழங்கினால், தொழிற்சாலைகள் இயங்கி வேலைவாய்ப்பு அதிகரிக்கும். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மின்வெட்டு ஏற்படுகிறது. கடநத காலத்திலும் ஏற்பட்டது. இன்றைய காலத்திலும் ஏற்படுகிறது.



ஜெயலலிதா முயற்சியினால், தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால், புதிய தொழிற்சாலைகள் வந்தன. தற்போது, அரசு சரியான முறையில் செயல்படவில்லை. அனல் மின் நிலையங்கள் முழுமையாக செயல்படாமல் மக்கள் அவதியடைகின்றனர். தொழிற்சாலைகள் இயங்கவில்லை. மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தூங்க முடியவில்லை. நிர்வாகம் சரியில்லாத அரசால் மின்வெட்டு ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். தடையில்லா மின்சாரத்தை வழங்காத காரணத்தினால் வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (33)

சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
22-ஏப்-202220:57:26 IST Report Abuse
சாண்டில்யன் எடப்பாடிக்கு வட மாநிலங்கள் எல்லாமே மின்வெட்டில் பாதிக்கப் பட்டுள்ள கதையும் குஜராத்துல தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருநாள் மூடுவிழாவாம் என்பதும் தெரியாதோ? எடப்பாடி எந்த TV யம் பார்க்க மாட்டாரோ? அல்லது தமிழக மக்களை அத்தனை மடையர்களாக நினைக்கிறாரோ?
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
23-ஏப்-202200:50:08 IST Report Abuse
John Millerஅவர் தூத்துக்குடி படுகொலைகளையே டீவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டார். அவரது அரசு போகும் போது மின்சாரத்தை சேமித்து வைத்து விட்டுத்தான் சென்றதாம். காமெடியில் செந்திலையும் மின்சி விட்டார்....
Rate this:
23-ஏப்-202209:46:25 IST Report Abuse
ராமகிருஷ்ணன் அ தி மு க வை சேர்ந்த அணில்கள் எல்லாம் திமுகவின் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேலை செய்கின்றன என்று அல்லக்கைகள் கூவலாம்....
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
22-ஏப்-202218:36:59 IST Report Abuse
sankar அணில்கள் தொல்லை தாறுமாறு சார் - என்ன செய்வது - விரட்டுவதற்கு ஒரு குழு அமைக்க இருக்கிறோம்
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
22-ஏப்-202217:37:54 IST Report Abuse
தமிழன் அன்றய மின்வெட்டு துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு டப்பு குடுக்க நினைக்கிறார் இன்றய மின்வெட்டு துறை அமைச்சர்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X