மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்!

Updated : ஏப் 24, 2022 | Added : ஏப் 22, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து, பேச்சு நடத்தினார். அப்போது, ''வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்,'' என பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை, வரும்
PM Modi, Boris Johnson, Boris Johnson in India, UK PM

புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து, பேச்சு நடத்தினார். அப்போது, ''வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்,'' என பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை, வரும் அக்டோபருக்குள் இறுதி செய்யவும் நேற்றைய சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு, பிரிட்டன் பிரதமர் ஆதரவு தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். குஜராத்தின் ஆமதாபாதுக்கு நேற்று முன்தினம் வந்த அவர், சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார். தொழிலதிபர் கவுதம் அதானியை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மேம்பாடு குறித்து பேசினார். இதன் பின் டில்லிக்கு நேற்று வந்த போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின் மோடியும், ஜான்சனும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, 'என் சிறந்த நண்பர் மோடி' என ஜான்சன் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது: நண்பர் நரேந்திர மோடி உடனான பேச்சு மிகச் சிறப்பாக அமைந்தது. உலகம் முழுதும் அச்சுறுத்தலும், எதேச்சதிகாரமும் அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டனும், இந்தியாவும் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.ராணுவ கொள்முதலில் வினியோக நேரத்தை குறைக்கும் வகையில், இந்தியாவுக்கு திறந்த ஏற்றுமதி உரிமத்தை பிரிட்டன் வழங்குகிறது. தரை, கடல், வான் மற்றும் இணையவெளியில் இரு நாடுகளும் சந்திக்கும் அச்சுறுத்தல்களை சமாளிக்க, இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைகளில், இரு நாடுகள் இடையே ஆழமான நட்பு உருவாகி உள்ளது. அதோடு, ராணுவத்தில் 'மேக் இன் இந்தியா' என்ற நரேந்திர மோடியின் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கவும் உறுதி ஏற்றுள்ளோம்.பிரிட்டன் - இந்தியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வரும் அக்டோபருக்குள் இறுதி செய்யப்படும். உக்ரைன் விவகாரத்தை பொறுத்தவரை, இந்தியா - ரஷ்யா இடையிலான வரலாற்று உறவை மதிக்கிறோம்.

அதே நேரம், உக்ரைனின் புச்சா நகரில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இந்தியா கடுமையாக கண்டித்ததையும், அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரிட்டனில் இருந்து மற்ற நாடுகளுக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தியாவில் குற்றம் புரிந்துவிட்டு, அந்நாட்டு சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, பிரிட்டன் சட்டத்தை நாடி வருபவர்களை ஒருபோதும் வரவேற்க மாட்டோம். வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என, இந்திய அரசின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது; பிரதமர் மோடியும் வலியுறுத்தினார். அவர்களை நாடு கடத்த பிரிட்டன் அரசு ஏற்கனவே அனுமதி அளித்தது. ஆனால், சட்ட சிக்கல்கள் காரணமாக அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என பிரிட்டனும் விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது. அதே உறுதியுடனும், வேகத்துடனும் பிரிட்டனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். இதற்கான பேச்சில் குறிப்பிட தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தை முடிக்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ராணுவ தளவாட உற்பத்தி, தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில், 'சுயசார்பு இந்தியா'வுக்கு பிரிட்டன் தரும் ஆதரவை வரவேற்கிறோம்.

உக்ரைன் விவகாரத்தில் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, பேச்சு வாயிலாக பிரச்னைக்கு முடிவு காண வேண்டும். அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதன் முக்கியத்துவமும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமைதியான, நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கத்திற்கும் எங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினோம். மற்ற நாடுகளில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு, ஆப்கானிஸ்தானை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.ஆரவார வரவேற்பு; அசந்து போன ஜான்சன்


பத்திரிகையாளர் சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடியை அவரது முதல் பெயரை குறிப்பிட்டு, நரேந்திரா என்றே பிரிட்டன் பிரதமர் ஜான்சன் பலமுறை அழைத்தார். இந்தியாவில் தனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறிய ஜான்சன், குறிப்பாக குஜராத்தில் உற்சாக வரவேற்பு அளித்து அசத்திவிட்டதாக கூறினார். ''ஒரு கட்டத்தில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கராகவே என்னை உணர்ந்தேன். அந்த அளவுக்கு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்,'' என கூறிய ஜான்சன், ''ஆமதாபாத் முழுதும் எங்கு பார்த்தாலும் அமிதாப் பச்சனை போல, 'போஸ்டர், பேனர்'களில் என் முகம் தான் தெரிந்தது,'' என்றார்.


அழுத்தம் தரப்படவில்லை!

உக்ரைன் விவகாரம் தொடர்பான பேச்சின் போது, ரஷ்யா மீதான பொருளாதார தடை தொடர்பாக, பிரிட்டன் தரப்பில் இருந்து எவ்வித அழுத்தங்களும் தரப்படவில்லை. இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறது என்பதை பிரதமர் மோடி தெளிவாக எடுத்துரைத்தார்.
- ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா, வெளியுறவுத்துறை செயலர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-ஏப்-202222:51:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ......
Rate this:
Cancel
Gopal - Chennai,இந்தியா
23-ஏப்-202212:12:09 IST Report Abuse
Gopal இதுகளை மக்கள் இன்னுமா நம்புகிறார்கள்...
Rate this:
Cancel
Gopal - Chennai,இந்தியா
23-ஏப்-202212:11:30 IST Report Abuse
Gopal எட்டு வருடமாக இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்...மக்கள் சொன்னதை நம்புவார்கள் என்று நினைக்கிறார்...ஆனால் இவர்கள் எல்லாம் எவ்வளவு பொய்யர்கள் என்பதை நிதின் கட்காரி சொன்னதை வைத்து மக்கள் புரிந்துகொண்டனர். மக்கள் வயிற்றில் அடித்து குவித்து வைத்துள்ள பணம் பல லட்சம் கோடி கையில் உள்ளது..அதனால் அடுத்த தேர்தலில் தோற்ற பிறகு பல வருடங்கள் பல லட்சம் செலவில் காளான் சாப்பிடலாம்...பல லட்சம் செலவில் உடைகள் உடுத்திக்கொள்ளலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X