உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேச்சு

Updated : ஏப் 24, 2022 | Added : ஏப் 23, 2022 | கருத்துகள் (47) | |
Advertisement
சென்னை: தமிழர்கள் மொழி அடையாளமிக்கவர்கள். மொழிக்காக முதலில் வருபவர்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 நிர்வாக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது: தமிழர்கள் மொழி அடையாளமிக்கவர்கள். தமிழர்களின் மொழி அடையாளம் பெருமை மிக்கது. மொழிக்காக முதலில் வருவார்கள்.சென்னை வழக்கறிஞர்கள்
உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி, ரமணா, தமிழர்கள், மொழி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழர்கள் மொழி அடையாளமிக்கவர்கள். மொழிக்காக முதலில் வருபவர்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.



சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 நிர்வாக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது: தமிழர்கள் மொழி அடையாளமிக்கவர்கள். தமிழர்களின் மொழி அடையாளம் பெருமை மிக்கது. மொழிக்காக முதலில் வருவார்கள்.



சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுததும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் நீதித்துறை கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது அவசியம். மக்களின் தேவையை நீதித்துறை பூர்த்தி செய்யும்.


சென்னை ஐகோர்ட் நிர்வாக கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரமணா பேசினார். தமிழில் வணக்கம் கூறி உரையை தொடங்கினார். சிறிது நேரம் தமிழில் பேசினார். தமிழர்கள் மொழி அடையாளமிக்கவர்கள். மொழிக்கு ஒன்றென்றால் முதலில் வருபவர்கள் தமிழர்கள் தான் என நீதிபதி ரமணா புகழ்ந்தார். சென்னை வக்கீல்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர். உள்ளூர் மொழிகளை வழக்காடு மொழியாக பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி சிக்கல் களைய ஆய்வு செய்யப்படும். நீதிபதி ஆவதற்கு மொழி, இனம், மதம் தடையாக இருக்கக்கூடாது என்றார். சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைப்பது குறித்து சக நீதிபதிகளுடன் ஆலோசனை செய்யப்படும் எனவும் கூறினார்.


latest tamil news


உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மாநில மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும். ஒருவர் நீதிபதியாக மொழி, இனம், மதம் ஆகியவை தடையாக இருக்கக்கூடாது. வழக்கு விசாரணை என்பது வழக்காடிகள் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.



சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைப்பது குறித்து சகநீதிபதிகளுடன் ஆலோசனை செய்யப்படும். கலந்து ஆலோசித்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வழக்குகளை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ரமணா பேசினார்.




திருக்குறள்


ரமணா பேசும் போது,


'ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்


தேர்ந்துசெய் வஃதே முறை' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
24-ஏப்-202210:26:02 IST Report Abuse
S Bala இந்தியாவின் உதவாக்கரை நீதிபதிகளில் இவர் ஒருவர். அனைத்து நீதிமன்றங்களும் ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் இரண்டு ஷிஃப்ட் முறையில் வேலை செய்ய, நீதிமன்றங்கள் வாரம் ஒரு நாள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் (மானில விடுமுறை பத்து நாட்கள் தவிர) வேலை செய்யவும், கீழமை நீதிமன்றங்கள் ஆறு மாதங்களிலும் முறையீட்டு நீதிமன்றங்கள் மூன்று மாதங்களிலும் தீர்ப்பளிக்கவும் என்ன செய்தார் இவர்?
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
24-ஏப்-202209:06:12 IST Report Abuse
Tamilan மொழிவாரி மாநிலம் கொடுத்தது நாட்டையும் பிராந்தியதையும் மொழி அடிப்படையில் கூறு போட்டு விற்கவோ சூறையாடவோ அல்ல என்பதை கோடிட்டு காட்ட மறந்துவிட்டார் .
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
23-ஏப்-202222:30:14 IST Report Abuse
Mohan கைய தட்டிக்கிட்டு முன்னாடி நிக்கிறத பார்த்து தப்புக்கணக்கு போட்டுட்டீங்க மை லாடு. அவரு எதைப் பார்த்து என்னா கணக்கு போடுறாருன்னு எங்களுக்குத் தானே தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X