கோடிகளில் கொண்டாட்டம்

Updated : ஏப் 23, 2022 | Added : ஏப் 23, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று மே மாதத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதை பிரமாண்டமாக கொண்டாட அக்கட்சி முடிவெடுத்துள்ளது.குறிப்பாக ஸ்டாலின் அரசின் ஓராண்டு சாதனைகள், வட மாநிலங்கள் முழுதும் வெளியாக தி.மு.க., தலைமை விரும்புகிறது. இதற்கான ஏற்பாடுகளை டில்லியில் உள்ள ஒரு பிரபல விளம்பர நிறுவனம் செய்து வருகிறது. முதல் ஆண்டு நிறைவன்று இந்தியா

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று மே மாதத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதை பிரமாண்டமாக கொண்டாட அக்கட்சி முடிவெடுத்துள்ளது.



latest tamil news



குறிப்பாக ஸ்டாலின் அரசின் ஓராண்டு சாதனைகள், வட மாநிலங்கள் முழுதும் வெளியாக தி.மு.க., தலைமை விரும்புகிறது. இதற்கான ஏற்பாடுகளை டில்லியில் உள்ள ஒரு பிரபல விளம்பர நிறுவனம் செய்து வருகிறது. முதல் ஆண்டு நிறைவன்று இந்தியா முழுதும் வெளியாகும் ஆங்கில தினசரிகளில் மட்டுமன்றி, ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட மாநில மொழிகளிலும் விளம்பரம் வர உள்ளதாம்.

ஸ்டாலின் படத்துடன் தி.மு.க., அரசு நிறைவேற்றிய திட்டங்கள் அனைத்தும் இந்த விளம்பரத்தில் இடம் பெறும். இதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளதாம். தமிழகத்தில் உள்ள பத்திரிகைகளில் விளம்பரத்துடன் தனி செய்தியும் தர தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளதாம். இந்த விளம்பர ஏற்பாடுகள் டில்லி அரசியல் வட்டாரங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.


latest tamil news


இந்த ஏற்பாடுகளை வைத்து, 'ஸ்டாலின் பிரதமர் கனவில் இருக்கிறார்' என கிண்டலடிக்கின்றனர் பா.ஜ., தலைவர்கள். தி.மு.க., ஒரு ஆண்டு சாதனைகளை கொண்டாட தயாராகி வரும் நிலையில், இதைக் குலைக்க அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளதாம். அக்கட்சி, தி.மு.க.,விற்கு எதிராக, வட மாநில தினசரிகளில் போட்டி விளம்பரங்களைக் கொடுக்க முடிவெடுத்துள்ளதாம்.

'தி.மு.க., அரசின் 365 நாள் வேதனை' என்ற தலைப்பில், சட்ட ஒழுங்கு மோசம், ரவுடிகளின் ஆதிக்கம், மின் தட்டுப்பாடு, நிறைவேற்றாத தேர்தல் அறிக்கைகள் என பல விஷயங்களை வட மாநில பத்திரிகைகளில் வெளியிட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் திட்டமிட்டுள்ளனராம்.

இது ஒரு புத்தக வடிவில் இருக்கும். அல்லது இது பற்றி பன்னீர் செல்வமும், பழனிசாமியும். 'யு டியூபில்' தோன்றி பேச உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சீனியர் எம்.பி., ஒருவர் கவனித்து வருகிறார்.

டில்லியிலிருந்து சில வட மாநில பத்திரிகையாளர்களை சென்னைக்கு அழைத்து வந்து இருவரின் பேட்டியையும் எடுத்து ஸ்டாலின் அரசின் ஓராண்டு சாதனைகள் வெளியாகும் அன்று இவர்களின் பேட்டி வெளியாக ஏற்பாடுகளை செய்துள்ளராம் அந்த சீனியர் எம்.பி.,


Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
24-ஏப்-202219:08:12 IST Report Abuse
DVRR ஒரே சாதனை ரூ 5.43 லட்சம் கோடி கடன் பதவியேற்ற அன்று இப்போ ரூ 6.75 லட்சம் கோடி கடன் அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ 11,000 கோடி கடன் ஏற்றம் அளவு திருட்டு திராவிட மடியல் அரசின் சாதனை
Rate this:
Cancel
24-ஏப்-202218:42:51 IST Report Abuse
ந சசிகுமார் தீயமுகவின் விஞ்ஞானரீதியான ஊழல்களையும் அம்பலப்படுத்த வேண்டும் நமது அண்ணாமலை அண்ணனின் புள்ளிவிவரமான பேட்டிகளை ஒளிபரப்ப வேண்டும் . தீயமுகவினருக்கு இப்போது மட்டும் இந்தி மற்றும் வட்டார மொழிகள் வேண்டுமா ?
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
24-ஏப்-202217:15:03 IST Report Abuse
Rafi ரவுடிகளின் ராஜ்யம் நாடெங்கிலும் நடந்து கொண்டிருப்பதை மக்கள் தினசரி அரங்கேறும் கலவரங்களை அனுபவித்து வருகின்றார்கள். உண்மையான வளைச்சி என்பதே தமிழகம் தான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X