டில்லி 'உஷ்ஷ்ஷ்': கோடிகளில் கொண்டாட்டம்

Updated : ஏப் 24, 2022 | Added : ஏப் 23, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று மே மாதத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதை பிரமாண்டமாக கொண்டாட அக்கட்சி முடிவெடுத்துள்ளது. குறிப்பாக ஸ்டாலின் அரசின் ஓராண்டு சாதனைகள், வட மாநிலங்கள் முழுதும் வெளியாக தி.மு.க., தலைமை விரும்புகிறது.இதற்கான ஏற்பாடுகளை டில்லியில் உள்ள ஒரு பிரபல விளம்பர நிறுவனம் செய்து வருகிறது.முதல் ஆண்டு நிறைவன்று இந்தியா முழுதும்
 டில்லி 'உஷ்ஷ்ஷ்': கோடிகளில் கொண்டாட்டம்

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று மே மாதத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதை பிரமாண்டமாக கொண்டாட அக்கட்சி முடிவெடுத்துள்ளது. குறிப்பாக ஸ்டாலின் அரசின் ஓராண்டு சாதனைகள், வட மாநிலங்கள் முழுதும் வெளியாக தி.மு.க., தலைமை விரும்புகிறது.

இதற்கான ஏற்பாடுகளை டில்லியில் உள்ள ஒரு பிரபல விளம்பர நிறுவனம் செய்து வருகிறது.முதல் ஆண்டு நிறைவன்று இந்தியா முழுதும் வெளியாகும் ஆங்கில தினசரிகளில் மட்டுமன்றி, ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட மாநில மொழிகளிலும் விளம்பரம் வர உள்ளதாம்.

ஸ்டாலின் படத்துடன் தி.மு.க., அரசு நிறைவேற்றிய திட்டங்கள் அனைத்தும் இந்த விளம்பரத்தில் இடம் பெறும். இதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளதாம்.

தமிழகத்தில் உள்ள பத்திரிகைகளில் விளம்பரத்துடன் தனி செய்தியும் தர தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளதாம். இந்த விளம்பர ஏற்பாடுகள் டில்லி அரசியல் வட்டாரங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்த ஏற்பாடுகளை வைத்து, 'ஸ்டாலின் பிரதமர் கனவில் இருக்கிறார்' என கிண்டலடிக்கின்றனர்

பா.ஜ., தலைவர்கள்.தி.மு.க., ஒரு ஆண்டு சாதனைகளை கொண்டாட தயாராகி வரும் நிலையில், இதைக் குலைக்க அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளதாம். அக்கட்சி, தி.மு.க.,விற்கு எதிராக, வட மாநில தினசரிகளில் போட்டி விளம்பரங்களைக் கொடுக்க முடிவெடுத்துள்ளதாம்.'

தி.மு.க., அரசின் 365 நாள் வேதனை' என்ற தலைப்பில், சட்ட ஒழுங்கு மோசம், ரவுடிகளின் ஆதிக்கம், மின் தட்டுப்பாடு, நிறைவேற்றாத தேர்தல் அறிக்கைகள் என பல விஷயங்களை வட மாநில பத்திரிகைகளில் வெளியிட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் திட்டமிட்டுள்ளனராம்.

இது ஒரு புத்தக வடிவில் இருக்கும். அல்லது இது பற்றி பன்னீர் செல்வமும், பழனிசாமியும். 'யு டியூபில்' தோன்றி பேச உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சீனியர் எம்.பி., ஒருவர் கவனித்து வருகிறார்.டில்லியிலிருந்து சில வட மாநில பத்திரிகையாளர்களை சென்னைக்கு அழைத்து வந்து இருவரின் பேட்டியையும் எடுத்து ஸ்டாலின் அரசின் ஓராண்டு சாதனைகள் வெளியாகும் .அன்று இவர்களின் பேட்டி வெளியாக ஏற்பாடுகளை செய்துள்ளராம் அந்த சீனியர் எம்.பி.,ஸ்டாலினுக்கு நெருக்கம் யார்?தமிழக அரசியல்வாதிகள் தங்கள் கட்சி விஷயங்களைப் பற்றி உள்ளூரில் வாய் திறப்பதில்லை. ஆனால், டில்லி வந்தால் இவர்கள் கலகலப்பாகி விடுகின்றனர்.

தற்போது, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு யார் நெருக்கம் என, தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலர் டில்லியில் விவாதம் நடத்தினர். சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு ஆகியோரது பெயர்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் பட்டியலில் இல்லை என்கின்றனர்

அந்த தி.மு.க., - எம்.பி.,க்கள். இப்போது ஸ்டாலினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நெருக்கமாக இருப்பவர் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவாம்.எந்த முக்கியமான விஷயமானாலும் தங்கம் தென்னரசைத் தான் அனுப்புகிறார்

ஸ்டாலின். அரசு தரப்பில் கவர்னரைச் சந்தித்து, தேனீர் விருந்திற்கு வர மாட்டோம் என சொல்ல தென்னரசைத்தான் அனுப்பினார் முதல்வர்.தமிழக அரசுக்கு அன்னிய முதலீடுகளை பெற்று வர, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகருக்கு தமிழக அரசு குழு ஒன்று செல்ல உள்ளது.

இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இக்குழுவிற்கு தலைமை தாங்கி செல்ல இருப்பவர் தென்னரசாம். நிதி அமைச்சர் தியாகராஜன் செல்லவில்லை. தென்னரசுடன் மக்கள் நலத் துறை அமைச்சர் சுப்ரமணியன் செல்கிறாராம்.

கட்சி பொறுப்புகளை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கவே இப்படி செய்கிறார் ஸ்டாலின் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், தென்னரசுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது, அந்த தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு கசப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.ராகுல் - -கமல் பேச்சு?தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், காங்., முன்னாள் தலைவர் ராகுல், மக்கள் நீதி மய்யம் தலைவர் - கமல்ஹாசன் இடையே சந்திப்பு, தகவல் பரிமாற்றம் அடிக்கடி நடந்தன. ஆனால், தேர்தலுக்குப் பின் இது 'கப்சிப்' ஆனது.சமீப காலமாக இருவருக்கும் இடையே மீண்டும் நட்பு தொடர ஆரம்பித்துள்ளதாக, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சில தினங்களுக்கு முன், ராகுல் 'வாட்ஸ் ஆப்'பில் கமலுக்கு 'மெசேஜ்' அனுப்பினாராம். மகிழ்ச்சியடைந்த கமல் பதில் போட்டுள்ளாராம்.இப்படி வாட்ஸ் ஆப்பில் நடைபெற்று வரும் கருத்து பரிமாற்றங்கள், ராகுல் - -கமல் இருவரையும் மீண்டும் ஒன்றிணைத்துள்ளதாக காங்., தரப்பில் சொல்லப்படுகிறது.தற்போது, ராகுல் வெளிநாடு சென்றுள்ளார்.

நாடு திரும்பியதும், மே முதல் வாரத்தில் ராகுல் - -கமல் சந்திப்பு நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 'கமல் கட்சியுடன் ராகுல் கூட்டணி வைக்கிறாரா அல்லது தி.மு.க., கூட்டணிக்கு கமலை அழைத்து வர முயற்சிக்கிறாரா' என, கேள்வி எழுப்பும் காங்., தலைவர்கள் ஒன்றும் புரியவில்லையே என முடிக்கின்றனர்.பழி வாங்கும் கெஜ்ரிவால்அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லாருமே ஒரே மாதிரி தான் செயல்படுகின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் இதற்கு விதிவிலக்கல்ல.'

அரவிந்த் கெஜ்ரிவால், காலிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்' என ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய கவிஞர் குமார் விஸ்வாஸ், பஞ்சாப் சட்டசபை தேர்தலின் போது, சமூக வலை தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின், 'கெஜ்ரிவால் பஞ்சாப் அதிகாரிகளை டில்லிக்கு வரவழைத்து உத்தரவிடுகிறார்' என அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.இதை நிரூபிக்கும் வகையில், விஸ்வாஸ் மீது பஞ்சாப் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

எதற்கு வழக்கு என்ற விபரங்களை தெரிவிக்க மறுக்கும் பஞ்சாப் போலீசார், டில்லிக்கு அருகே வசிக்கும் விஸ்வாஸை, பஞ்சாபில் நடக்கும் விசாரணையில் பங்கேற்க வேண்டும் என மிரட்டியுள்ளனராம்.

அல்கா லம்பா என்பவரும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி, கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து வருகிறார். இவர் மீதும் பஞ்சாப் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளதாம். கெஜ்ரிவால், டில்லி முதல்வராக இருந்தாலும், அம்மாநில போலீஸை வைத்து எதையும் செய்ய முடியாது.

காரணம் டில்லி போலீஸ் மத்திய அரசின் கீழ் உள்ளது. இதனால், கெஜ்ரிவால் பஞ்சாப் போலீசை வைத்து தன் அரசியல் எதிரிகளை பழி வாங்கி வருகிறார் என்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
13-மே-202214:40:40 IST Report Abuse
jayvee தொப்புள் மேல கஞ்சி .. இருக்கு செலவு செய்யறாங்க.. ஆனா ஒன்னு.. ஸ்டாலிநின் ஹிந்தி எதிர்ப்பு கொளகையும் அவர்கள் ஹிந்தி பத்திரிகையில் வெளியிட வேண்டும்.. என்ன முட்டினாலும், கேபினட் அமைச்சர்கூட அடுத்த தேர்தலில் கிடைக்காது கிடைச்சாலும் அது நிலைக்காது
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03-மே-202211:17:37 IST Report Abuse
Ramesh Sargam கடந்த ஓராண்டில் இவர்கள் ஆட்சியில் நடந்த 'சாதனைகளை' விட 'வேதனைகள்' அதிகம். குறிப்பாக, மாணவன் ஆசிரியரை அடிக்க கையோங்குவது, மாணவியர்கள் பள்ளி சீருடையில் குடித்து கும்மாளமடிப்பது, மாணவர்கள் பள்ளிக்கூட பெஞ்ச், நாற்காலி போன்ற பொருட்களை உடைப்பது, மாணவியின் மடியில் படுத்து கொஞ்சி குலாவுவது, அதுவும் வகுப்பறையிலேயே... இப்படி எவ்வளவு 'சாதனைகள்' இந்த ஓராண்டில்... அடுக்கிக்கொண்டே போகலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X