கோவை இணை கமிஷனர் காரில் ரூ.28 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்

Added : ஏப் 24, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
கோவை : கோவை போக்குவரத்துறை இணைக்கமிஷனரின் காரில் இருந்த 28 லட்சம் ரூபாய், லஞ்ச பணத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.கோவை சரக போக்குவரத்துத்துறை இணைக்கமிஷனர் உமாசக்தி, 58. இவரது கட்டுப்பாட்டில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுகின்றன.உமாசக்தி, ஓய்வு பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வராஜ்
 கோவை இணை கமிஷனர் காரில் ரூ.28 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்

கோவை : கோவை போக்குவரத்துறை இணைக்கமிஷனரின் காரில் இருந்த 28 லட்சம் ரூபாய், லஞ்ச பணத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.கோவை சரக போக்குவரத்துத்துறை இணைக்கமிஷனர் உமாசக்தி, 58. இவரது கட்டுப்பாட்டில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுகின்றன.

உமாசக்தி, ஓய்வு பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வராஜ் வாயிலாக போக்குவரத்து துறை பணிகளுக்காக லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் கண்காணித்து வந்தனர்.கோவை லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., திவ்யா தலைமையிலான போலீசார், நேற்று காலை சிங்காநல்லுார் குளம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த உமாசக்தியின் காரை சோதனையிட்டனர்.

'பேக்'குகளில் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த 28.35 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின், சவுரிபாளையத்திலுள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. இணைக்கமிஷனர் உமாசக்தி அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வலையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், 'கைப்பற்றப்பட்ட பணம், போக்குவரத் துறை அதிகாரிகளிடம் மாதா மாதம் வசூலிக்கப்படும் மாமூல் தொகை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
24-ஏப்-202219:15:34 IST Report Abuse
DVRR சே சே அக்கிரமம் அநியாயம் இந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திமுக அரசுக்கு செல்லும் இந்த வெறும் ரூ 28.35 லட்சம் ரூபாயை லவட்டி விட்டார்களே நாளை இந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது திமுக அடிமை போலீஸ் வழக்கு போடும் கைது செய்யும் அவர்களை
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-ஏப்-202215:22:25 IST Report Abuse
D.Ambujavalli அவர் அந்தப் பணம் யாருக்குப் போகிறது என்று கூறி, அவர் நம்பரை போனில் போட்டுக்கொடுப்பார் அவரும் பேசுவார். அவ்வளவுதான் வறுத்தம் தெரிவித்து, சல்யூட் அடித்து அனுப்பி வைப்பார் லஞ்ச ஒழிப்பு ஆபீசர். கதை முடிந்தது இவருக்கு வார்னிங் வரும், 'பணத்தைக். கூட சூதானமாக எடுத்துவர தெரியாதா, இத்தனை வருஷ சர்வீஸில் ' என்று
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-202214:09:45 IST Report Abuse
vpurushothaman ஆர்.டி.ஓ.ஆபிஸில் இதெல்லாம் சகஜமப்பா. இவுங்க கொடுக்கற லைசென்ஸில் வண்டி ஓட்டினா விபத்து ஏற்படாமல் என்ன செய்யும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X