இது உங்கள் இடம்: இன்னும் நிறைய 'சாகசம்' பார்க்கலாம்!

Updated : ஏப் 24, 2022 | Added : ஏப் 24, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்: வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எந்த ஒரு பிரச்னைக்கும், தலைவர்களுக்கு கறுப்புக்கொடி காட்டுவது, அவர்கள் மீது கல்லெறிவது, செருப்பு வீசுவது, மரங்களை வெட்டி சாலையில் போட்டு மறியல் செய்வது போன்றவை எல்லாம், தி.க., - வி.சி.க., -

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:
latest tamil news


வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எந்த ஒரு பிரச்னைக்கும், தலைவர்களுக்கு கறுப்புக்கொடி காட்டுவது, அவர்கள் மீது கல்லெறிவது, செருப்பு வீசுவது, மரங்களை வெட்டி சாலையில் போட்டு மறியல் செய்வது போன்றவை எல்லாம், தி.க., - வி.சி.க., - பா.ம.க., கட்சிகளுக்கு கைவந்த கலை.
அதேபோல, கவர்னருக்கு கறுப்புக் கொடி காட்டுவதும், அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவதும், திராவிட கட்சிகளுக்கு புதிதல்ல. ஏற்கனவே கவர்னராக இருந்த சென்னாரெட்டி கார் மீது, முட்டை வீசி பழக்கப்பட்டவர்கள் தான் இவர்கள்.
இப்போது, தி.மு.க.,விற்கு சாமரம் வீசி, ஜால்ரா போட்டு வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த இந்திராவையே அவமானப்படுத்தி, பிரதமர் பதவி வகித்த அவருக்கே கொலை மிரட்டல் விடுத்த புண்ணியவான்களும் இவர்களே.
கவர்னர் ரவிக்கு கறுப்புக்கொடி காட்டியது மட்டுமின்றி, அவரை தகாத வார்த்தைகளால் விமர்சித்து கோஷமிட்டவர்களை, முதல்வர் ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை என்று யாரும் கேட்க வேண்டாம். ஏனெனில், பின்னால் இருந்து இயக்கியவரே அவர் தானே. மாறாக உள்ளூர சந்தோஷம் அடைந்திருப்பார்; கருணாநிதியின் மகன் அல்லவா அவர்!
பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக யாரேனும் கருத்து கூறினாலோ, எழுதினாலோ, அவர்களை அநாகரிக வார்த்தைகளால் விமர்சிப்பவர்களையும், போராட்டம் என்ற பெயரில், காட்டு மிராண்டி செயலில் இறங்குவோரையும் வேடிக்கை பார்த்து ரசிப்பது தான், திராவிட மாடல் ஆட்சி போலும். என்னதான் அவ்வப்போது, தி.மு.க.,வினர் நல்லவர்கள் போல, புதுப்புது அவதாரம் எடுத்தாலும், அந்த முகமூடிகள் கிழிந்து, அவர்களின் பழைய முகங்கள் அடிக்கடி வெளியே தெரிந்து விடுகின்றன.


latest tamil news


ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், இப்போது தான், தி.மு.க.,வினரின் அராஜகங்கள் ஆரம்பிக்க துவங்கி இருக்கின்றன. போகப்போக விடியல் ஆட்சி தொண்டர்களின், 'சாகசங் களை' இன்னும் நிறையவே பார்க்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-202219:43:35 IST Report Abuse
Kasimani Baskaran பலூன் விடுவார்கள், தீவிரவாத எண்ணம் உள்ள கூட்டணிக் கட்சிகளை வைத்து சில்லரைத்தனம் செய்துகொண்டே காலில் விழுந்து கவர்னருக்கும் எங்களுக்கும் உறவு சிறப்பாக இருக்கிறது என்று உருட்டுவார்கள். சொல்லுக்கும் செயலுக்கும் சிறிது கூட சம்பந்தம் இருக்காது. அதாவது திராவிடம் என்று எவனெல்லாம் உருட்டுகிறானோ அவனெல்லாம் நம்பத்தகுந்த ஆள் இல்லை.
Rate this:
Cancel
Thiru - Chennai,இந்தியா
24-ஏப்-202219:00:25 IST Report Abuse
Thiru திராவிடியன் (தி ரவுடியன்) stocks.
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-202220:46:56 IST Report Abuse
Kasimani Baskaranபல சிக்கல்களை அனுபவித்தபின் கடைசியில் மத்திய அரசுடன் இணக்கமாக இல்லை என்றால் காசடிக்க முடியாதது மட்டுமல்லாமல் மாநிலத்தையும் நிர்வகிக்க முடியாது என்பது முகவுக்கு தெளிவாக தெரிந்தது. திக போன்ற தேசவிரோதிகளுடன் உறவு என்றாலும் அவர்களை அதிக அளவில் ஆட விட்டது கிடையாது. ஆனால் இன்றோ கூட்டுக்கட்சிகளின் ஆட்டம் அதிகம். தவிரவும் திமுகவுக்கு நேரடியாக ரெளடித்தன் செய்ய தைரியம் கிடையாது. ஆகவே ஓசிசோற்றுப்பட்டாளத்தை ஏவி விடுவார்கள்....
Rate this:
Cancel
24-ஏப்-202218:53:50 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் "ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், இப்போது தான், தி.மு.க.,வினரின் அராஜகங்கள் ஆரம்பிக்க துவங்கி இருக்கின்றன. " ……. இப்போதுதான் ???? வாசகர் அப்சர்வ் செய்த அழகே அழகு ………..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X