சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டது; டிரைவர் காயம்

Updated : ஏப் 24, 2022 | Added : ஏப் 24, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பணிமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்சார ரயில், கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மீது ஏறி, அங்கிருந்த கடைகளின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், டிரைவர் லேசான காயமடைந்தார். அந்த ரயிலில் பயணிகள் யாரும் பயணிக்கவில்லை. பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வழித்தடத்தில் மட்டும் ரயில்
chennai, electrictrain, Train, சென்னை, மின்சார ரயில், ரயில், தடம்புரண்டது,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பணிமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்சார ரயில், கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மீது ஏறி, அங்கிருந்த கடைகளின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், டிரைவர் லேசான காயமடைந்தார். அந்த ரயிலில் பயணிகள் யாரும் பயணிக்கவில்லை. பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வழித்தடத்தில் மட்டும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். ரயில் நிலையத்தில் அதிகளவு கூட்டம் இல்லாததால் யாரும் பாதிக்கப்படவில்லை.


latest tamil news


ரயில்வே பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், பணிமனையில் இருந்த வந்த ரயில் என்பதால் பயணிகள் யாரும் இல்லை. பிரேக் செயல் இழந்ததால் தான் விபத்து ஏற்பட்டது. ரயில் விபத்து தொடர்பாக உரிய மட்டத்தில் விசாரணை நடத்தப்படும். நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஓட்டுநர் ரயிலில் இருந்து குதித்து தப்பினார். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
25-ஏப்-202211:37:42 IST Report Abuse
jayvee மொபைல் போனில் படம் பார்த்துக்கொண்டே ரயிலொட்டினாலும் விபத்து நடக்கும்
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
24-ஏப்-202219:53:59 IST Report Abuse
Soumya விடியல் வந்த நேரம் எல்லாம் தலைகீழா நடக்குது
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-202219:33:59 IST Report Abuse
Kasimani Baskaran நல்ல வேளையாக சேதம் குறைவாகவே இருந்தது என்பதால் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X