சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்க தற்காலிக தடை: இந்தியா அதிரடி

Updated : ஏப் 25, 2022 | Added : ஏப் 24, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: சீனாவை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தனது உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளது.கோவிட் பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு, சீனா பல்கலை.,களில் படித்த 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். ஆனால், திரும்பி செல்வதற்கு சீனா அனுமதி கொடுக்காததால், மாணவர்களால்
india, china, visa,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சீனாவை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தனது உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளது.

கோவிட் பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு, சீனா பல்கலை.,களில் படித்த 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். ஆனால், திரும்பி செல்வதற்கு சீனா அனுமதி கொடுக்காததால், மாணவர்களால் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கோரிக்கை விடுத்தும், சீனா காலம் தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் ஏப்.,20ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசா இனி செல்லுபடியாகாது. பூடான், மாலத்தீவுகள், நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் மட்டுமே இந்தியாவிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்திய குடியிருப்பு அனுமதி அட்டை, இந்தியா வழங்கிய விசா மற்றும் இ விசா, வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை, இந்திய வம்சாவளி அட்டை, தூதரக கடவுச்சீட்டு ஆகியவற்றை வைத்துள்ள பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் சுற்றுலா விசா இனி செல்லாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-202219:46:39 IST Report Abuse
Kasimani Baskaran கோவிட்19 அதிக அளவில் இருப்பதால் மிகச்சரியான முடிவுதான்.
Rate this:
Cancel
24-ஏப்-202219:42:59 IST Report Abuse
அப்புசாமி ஆத்மநிர்பரா கீழே சீன இறக்குமதி அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்புடத் தக்கது.
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
25-ஏப்-202202:28:35 IST Report Abuse
Neutral Umpireஉலகம் முழுக்க சீன தயாரிப்புகள் இறக்குமதியாகின்றன, மலிவு ஒரு காரணம் . நீங்க ஏற்றுமதி பண்ணலாமே .....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஏப்-202218:16:36 IST Report Abuse
Lion Drsekar கொரானாவுக்காக இந்த தடை ஆனால் அந்த நாட்டை ஆளும் கட்சியினர்களுக்கு இங்கு நாம் அங்கீகாரம் கொடுத்து அவர்கள் கைகளில் இந்த நாட்டையே ஒப்படைத்து இருக்கிறோமே இது போன்று உலகில் வேறு எந்த ஒரு நாடாவது இருக்குமா ? தோற்று நோய்க்கு உள்ளவர்கள்தான் உள்ளே இப்போது வர இயலாது ஆனால் என்றென்றும் எங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகித்து எங்களை வழி நடத்துவதே இவர்கள்தான் . தயவு செய்து தவறாக நினைக்கவேண்டாம் இந்த பதிவு தலைப்புக்காக"சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்க தற்காலிக தடை" பதிவு செய்யப்பட்டது, நீங்கள் இங்கு ஆள்வததற்கு எந்த ஒரு தடையும் இல்லை, வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X