தமிழ் இனத்தை ஜாதி, மதத்தால் பிரிக்க முயற்சி: ஸ்டாலின்

Updated : ஏப் 24, 2022 | Added : ஏப் 24, 2022 | கருத்துகள் (76) | |
Advertisement
சென்னை: 'தமிழ் இனத்தை ஜாதி, மதத்தால் பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர்' என இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.திருவான்மியூரில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிறுபான்மை இயக்கத்திற்கும், தி.மு.க.,விற்கும் காலம் காலமாக உள்ள தொடர்பு தொடரும். இதில், கலகத்தையோ, பிரிவையோ ஏற்படுத்த முடியாது.
Iftar, MK Stalin, DMK, Stalin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'தமிழ் இனத்தை ஜாதி, மதத்தால் பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர்' என இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருவான்மியூரில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிறுபான்மை இயக்கத்திற்கும், தி.மு.க.,விற்கும் காலம் காலமாக உள்ள தொடர்பு தொடரும். இதில், கலகத்தையோ, பிரிவையோ ஏற்படுத்த முடியாது. எதிர்கட்சியாக இருந்த போதே, இஸ்லாமியர்களுக்காக தி.மு.க., குரல் கொடுத்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அவர்களுக்காக, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளது.


latest tamil news



மதம் என்பதும், சமய நம்பிக்கை என்பதும், அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமை உணர்வுடன் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்; பலமும் அதிகம்.

தமிழ் இனத்தை ஜாதி, மதத்தால் பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். அப்படி செய்தால், தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைக்கின்றனர். நம்மை பிளவுப்படுத்துவதன் வாயிலாக, நம் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கின்றனர். அதற்கு தமிழினம் பலியாகக் கூடாது. இதற்கு பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து, தெளிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அமைதியான, நிம்மதியான நாடு தான் அனைத்து விதமான வளர்ச்சியையும் பெற முடியும். அத்தகைய வளர்ச்சிக்கான சூழலை, ஓராண்டு காலத்தில் நம் அரசு உருவாக்கி உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
25-ஏப்-202217:42:47 IST Report Abuse
vbs manian இதையெல்லாம் யார் செயகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Cancel
Karthikeyan K Y - Chennai,இந்தியா
25-ஏப்-202217:42:08 IST Report Abuse
Karthikeyan K Y தமிழர்களை, மதம், இனம், ஜாதி, மொழி, இவைகளை வைத்து பிரித்தது பெரியாரும், அண்ணாத்துரையும், கருணாநிதியும், திமுகவும்தான். பின்பு கல்வி, மருத்துவம், திருநங்கையர் , ஆடு, மாடு, கோழி, பிணம் , பணம், மரம், கோயில், சிலை, தெய்வம், கடவுள் போன்று எல்லாவற்றையும் வோட்டிற்காக அரசியல் செய்து ஈனம் மானத்தையும் விட்டு அரசியல் செய்து பதவியை பணத்திற்காக குடும்பத்திற்காக பொய் பித்தலாட்டலத்தை செய்வது யார் , பிஜேபி மதத்தை வைத்து அரசியல் செய்கிறது என்றால், மதத்தையும் ஜாதியை இனத்தை மொழியை ப்ராஹ்மண தலித் மலை வாழ் சமூகத்தினரை வைத்து அரசியல் பிழைப்பு செய்ய கற்று கொடுத்தது திமுக . மக்கள் ஏமாறும் வரை இது தொடரத்தான் போகிறது
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
25-ஏப்-202217:39:14 IST Report Abuse
Anand தம என சொல்லி போலி வேஷம் போடும் இந்த திருட்டு திராவிஷ கூட்டம் அழியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X