பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: புடின் கடிதம்

Updated : ஏப் 24, 2022 | Added : ஏப் 24, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
இஸ்லாமாபாத்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எழுதிய கடிதத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.பாகிஸ்தானில் இம்மாத தொடக்கத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் இம்ரான் ஆட்சி கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி
Putin, Pak Prime Minister,Shehbaz Sharif, Vladimir Putin

இஸ்லாமாபாத்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எழுதிய கடிதத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இம்மாத தொடக்கத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் இம்ரான் ஆட்சி கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து ரஷ்ய அதிபர் புடின் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவற்றை ஊடகங்களிடம் இரு தரப்பும் தெரிவிக்கவில்லை. பொது கவனத்தை தவிர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


latest tamil news


அக்கடிதம் குறித்து வெளியுறவு மூத்த அதிகாரி பகிர்ந்துகொண்ட தகவல்களை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக கூறி புடின் புதிய பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது பதில் கடிதத்தில் அதே போன்ற உணர்வினை இரு தரப்பு உறவுகளில் வெளிப்படுத்தினார். மேலும் ஆப்கன் விவகாரத்தில் ஒத்துழைப்பை கோரினார். என தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
25-ஏப்-202217:41:31 IST Report Abuse
Anand எப்படியோ ரஷ்ய அமெரிக்கா கூட்டணி பாகிஸ்தானையும் உண்டு இல்லையென்று செய்ய முடிவெடுத்துவிட்டார்கள்... வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
25-ஏப்-202214:40:16 IST Report Abuse
sethusubramaniam பாலுக்கும் காவல் , பூனைக்கும் தோழன் புடின். மோடி , ஜெய்ஷ்ங்கர் உஷாரு
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
25-ஏப்-202214:37:15 IST Report Abuse
Kalyan Singapore இம்ரானை கவிழ்த்தவர்கள் அமெரிக்காவின் ஆதரவாளர்கள் சீனாவிடம் இம்ரானுக்கு இருந்த ஆதரவை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள முடியாமல் அவரை அகற்றிவிட்டார்கள். அமெரிக்காவிடம் பாக்கிஸ்தான் சாயக்கூடாது என்பதால் தான் புடின் ஆதரவு அளிக்கிறார். அதை ஏற்றுக்கொண்டால் பிறகு பாகிஸ்தான் தானாக அடங்கி விடும் ( பணமும் கிடைக்காது ஆயுதமும் கிடைக்காது)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X