கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி

Updated : ஏப் 24, 2022 | Added : ஏப் 24, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
ஜாபுவா-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி,'கடக்நாத்' எனப்படும், கறுப்பு நிற கோழிகளை, தன் பண்ணையில் வளர்க்கிறார். இதற்காக, 2,000 கோழிகள் மத்திய பிரதேசத்தில் இருந்து அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஜாபுவா உள்ளிட்ட சில மாவட்டங்களில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜாபுவா-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி,'கடக்நாத்' எனப்படும், கறுப்பு நிற கோழிகளை, தன் பண்ணையில் வளர்க்கிறார்.



latest tamil news



இதற்காக, 2,000 கோழிகள் மத்திய பிரதேசத்தில் இருந்து அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஜாபுவா உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே வளர்கின்றன, கடக்நாத் எனப்படும் கறுப்பு நிற கோழிகள். புரதச்சத்து அதிகம் உள்ள இந்தக் கோழிகளுக்கு, புவிசார் குறியீட்டையும் மத்திய பிரதேசம் பெற்றுள்ளது.


latest tamil news



பழங்குடியின மக்களால் வளர்க்கப்படும் இந்தக் கோழி, அம்மக்களின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்தக் கோழிகளை வாங்கி வளர்ப்பதற்கு, 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்யும் வசதியையும் அரசு செய்துள்ளது.ஜார்க்கண்டின் ராஞ்சியில் வசித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2,000 கோழிக் குஞ்சுகளுக்கு ஆன்லைன் வாயிலாக பதிவு செய்திருந்தார்.

அதன்படி, மத்திய பிரதேசத்தின் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கம், 2,000 கோழிகளை, தோனியின் ராஞ்சி பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.சாதாரண வகை கோழிகளைவிட, இந்தக் கோழியின் இறைச்சி மற்றும் முட்டை விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
25-ஏப்-202214:37:24 IST Report Abuse
sethusubramaniam இவர் வளர்த்துவிட்ட கோலி இப்போ நிறைய முட்டை போடுது.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
25-ஏப்-202214:17:10 IST Report Abuse
Samathuvan என்னடா இது, ஒருத்தன் ஆடு வளர்க்கிறேங்குறான், இன்னுருத்தன் கோழி வளர்கிறேங்குறான், இதுக்கு மேல இன்னொருத்தர் மயிலு வளர்க்கிறேன்னு சொல்றாரு. ஆனா யாரு தான்யா இந்திய மக்களின் மேம்பாட்டை வளர்க்குறது. அதுவும் குறிப்பா வடநாட்டு மனித வள மேம்பாட்டை.
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
25-ஏப்-202213:03:27 IST Report Abuse
Manguni 'கோலியை' வளர்த்து விட்டு நமக்கே ஆப்பு அடிச்சது ஞாபகம் இல்லையா? திரும்பவும் கோழியா? என்ன தோணி இது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X