மஹா., முதல்வருக்கு எதிராக பேசிய எம்.பி., எம்.எல்.ஏ., சிறையில் அடைப்பு

Updated : ஏப் 24, 2022 | Added : ஏப் 24, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு முன் அனுமன் சாலிசா பாடுவோம் என அறிவித்திருந்த அம்மாநில சுயேட்சை எம்.பி., நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் ரவி ராணா எம்.எல்.ஏ.,வை நேற்று மும்பை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதி சுயேட்சை எம்.பி.,யாக இருப்பவர் நவ்நீத்
Custody, Uddhav Thackeray, Face Off

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு முன் அனுமன் சாலிசா பாடுவோம் என அறிவித்திருந்த அம்மாநில சுயேட்சை எம்.பி., நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் ரவி ராணா எம்.எல்.ஏ.,வை நேற்று மும்பை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதி சுயேட்சை எம்.பி.,யாக இருப்பவர் நவ்நீத் ராணா. இவர் தமிழில் அம்பாசமுத்திரம் அம்பானி படத்திலும் நடித்துள்ளார். இவரது கணவர் ரவி ராணா மஹாராஷ்டிராவின் பத்நேரா தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., இவர்கள் அனுமன் ஜெயந்தி அன்று முதல்வர் உத்தவ் தாக்கரே தனது வீட்டு முன் அனுமன் சாலிசா பாட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். அதனை உத்தவ் தாக்கரே ஏற்காததால் அவர் வீட்டு அனுமன் சாலிசா பாடுவோம் என கூறி மும்பை வந்தனர்.


latest tamil newsஉத்தவ் தாக்கரேவை எதிர்த்ததால் மும்பையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சிவசேனா கட்சியினர் முற்றுகையிட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுவதாக கூறி தம்பதியினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது அரசு இயந்திரத்துக்கு சவால் விட்டு முதல்வருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக கூறி தேசத்துரோகம், இரு பிரிவினரிடையே பகையை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், காவல் துறையின் தடை உத்தரவுகளை மீறுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.

அவர்கள் இருவரையும் இன்று பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். அதனை மறுத்த நீதிமன்றம் இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அவர்களது ஜாமீன் மனு ஏப்ரல் 29 அன்று விசாரணைக்கு ஏற்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியது. இதனையடுத்து நவ்நீத் ராணா பைகுலா பெண்கள் சிறைக்கும், ரவி ராணா ஆர்த்தர் சாலை சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.

தன் மீதான வழக்குகள் குறித்து ராணா தம்பதியினர் கூறியதாவது: அனுமன் பெயரையும், ஸ்ரீராமரின் பெயரையும் நாங்கள் சொன்னதால், அனுமன் சாலிசா பற்றி பேசியதால் உத்தவ் தாக்கரே எங்களுக்கு எதிராக சதி செய்து பொய் வழக்குகள் போட்டுள்ளார். அனுமன் சாலிசா பாடுவது குற்றம் கிடையாது. இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
25-ஏப்-202217:36:52 IST Report Abuse
vbs manian மராட்டியர் மராட்டி மொழியை வைத்து மிரட்டும் சிவசேனா.கழகத்துக்கு தம்பி.
Rate this:
25-ஏப்-202219:27:44 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்இதே மாதிரி ஒரு MLA இல்லாத ஒருத்தன் தினம் தினம MIKE முன்ன உலறுகிறான் அவனையும் கைது செய்யணும்...
Rate this:
Cancel
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
25-ஏப்-202215:22:24 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman உத்தவ், சரத் பவார், மற்றும் காங்கிரஸ் முவரும் மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் உட்கார்ந்து சாப்பிட முடிவு செய்து விட்டாரகல். மூன்று கட்சிகளும் ஒன்ராய் உட்கார்ந்து சாப்பிடுவதால் ஒன்றுக்கு ஒன்று பலம். வருகின்ற தேர்தல்கலில் கூட இவ்ரகள் மூவரும் சேர்ந்து வெற்றி பெருவாரகள். ஆகயால் இப்பொது கேட்பதற்கு ஆளில்லை. அவ்ரகள் வைத்தது சட்டம். இன்னும் கொஞ்ச நாட்களில் மும்பை வாழ் தமிழரும் வட நாட்டவரும் சேனாவை பார்த்து அஞ்சி நடுங்கும் காலம் வந்தாலும் ஆசரிய படுவதற்கு ஒன்றுமில்லை.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
25-ஏப்-202214:41:54 IST Report Abuse
sankar மக்காள் சேவை செய்ய வேண்டிய இந்த இருவரையும், அனுமன் பாடலை பாடவா இவர்களைத் தேர்ந்தெடுத்தனர்? ஈவர்கள் உள்ளே இருக்க வேண்டியவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X