குஜராத்தை போல துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க வேண்டும்: ஸ்டாலின்

Updated : ஏப் 25, 2022 | Added : ஏப் 25, 2022 | கருத்துகள் (130) | |
Advertisement
சென்னை: குஜராத்தை போல துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வலியுறுத்தி பேசினார். முன்னதாக துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதாவை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. உயர்கல்வி துறையின் கீழ் பல்வேறு
TamilnaduCM, Stalin, TN Assembly, Vice Chancellor, Govt, Bill, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், துணை வேந்தர்கள், தமிழக அரசு, நியமனம், சட்ட மசோதா, தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: குஜராத்தை போல துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வலியுறுத்தி பேசினார். முன்னதாக துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதாவை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.



சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. உயர்கல்வி துறையின் கீழ் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகின்றன. துணை வேந்தர்களை கவர்னர் மூலமே நியமித்து வருகின்றனர். உயர்கல்வியை அளிக்கும் மாநில அரசை மதிக்காமல் துணை வேந்தர்களை கவர்னரே நியமிப்பது சரியான செயல் அல்ல. இது மக்களாட்சியின் தத்துவத்திற்கு எதிராக உள்ளது. இதில் மாற்றம் ஏற்பட வேண்டிய சூழல் நிலவுகிறது.



latest tamil news

இது மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்னை, மாநில கல்வி உரிமை தொடர்பான பிரச்னை. பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கிறது. இதுபோல் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவில் மாநில அரசின் பரிந்துரையின்பேரில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். குஜராத்தில் உள்ளது போல உரிய திருத்தம் செய்து மாநில அரசே நியமனம் செய்யும் உரிமையை வழங்க வேண்டும் என்பது குறித்து மசோதா நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.




அதிமுக எதிர்ப்பு - பா.ஜ., வெளிநடப்பு


முன்னதாக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் புதிய சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் தாக்கல் செய்தார். இதற்கு அதிமுக ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல், சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (130)

Balasubramanian - Bangalore,இந்தியா
25-ஏப்-202221:11:27 IST Report Abuse
Balasubramanian குஜராத் போல தமிழ் நாட்டில் மது விலக்கை அமல் செய்யுங்கள் முதலில் பின் துணை வேந்தர்கள் விவகாரத்தை கவனிக்கலாம்
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
25-ஏப்-202219:57:50 IST Report Abuse
Venugopal S இங்கு குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது என்று சொல்பவர்கள் யாரும் குஜராத்திற்கு சென்று பார்த்ததும் கிடையாது,குஜராத்தைப் பற்றியும் தெரியாது.குஜராத்தில் கடத்தல் சரக்கு வியாபாரிகள் ஹோம் டெலிவெரியை 2010 க்கு முன்பே நடைமுறைப் படுத்தியவர்கள்.கடத்தல் சரக்கு மாநிலம் முழுவதும் வெள்ளமாக ஓடுகிறது.2009 ஜூலை மாதம் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து 130 பேர் இறந்தனர்.மதுவிலக்காம் புண்ணாக்கு.
Rate this:
Mohan - COIMBATORE,இந்தியா
25-ஏப்-202220:07:22 IST Report Abuse
Mohan..நான் அங்க 1.5 வருஷம் இருந்திருக்கேன் ...அங்கே எல்லாம் கண்டிப்பா சரக்கு கிடையாது ..வெளி ஊர்ல இருந்து வர்றவங்களுக்கு தான் கிடைக்கும் தெரியுமா..அதுவும் ரயில் டிக்கெட் , விமான டிக்கெட் குடுக்கோணும் தெரியுமா .கரண்ட் விலை அதிகமா இருந்தாலும் கட்டே ஆகாது, ரோடு எல்லாம் நல்ல இருக்கும்.....
Rate this:
26-ஏப்-202205:07:05 IST Report Abuse
ராஜாகாலம் காலமாக திராவிட அரசுகளின் ஆசீர்வதத்தோடு கீழக்கரையில் நடந்துகொண்டு உள்ளது. முதலில் அங்கு போய் பார்த்துவிட்டு வா....
Rate this:
Cancel
RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
25-ஏப்-202219:26:20 IST Report Abuse
RAMAKRISHAN NATESAN     தெலுங்கான ஆந்திர கர்நாடக குஜராத் பஞ்சாப் போன்ற மாலிங்களில் உள்ளதே ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X