நேரு, நேருன்னு சொல்றீங்களே...அது யாரு... அமைச்சரிடம் கேட்ட மேயரால் அலறுது ஊரு!| Dinamalar

நேரு, நேருன்னு சொல்றீங்களே...அது யாரு... அமைச்சரிடம் கேட்ட மேயரால் அலறுது ஊரு!

Updated : ஏப் 26, 2022 | Added : ஏப் 26, 2022 | |
வெயிலில் வியர்த்து வந்த மித்ராவுக்கு, சில்லென்று கரும்புச்சாறு கொடுத்து வரவேற்றாள் சித்ரா. அதை ரசித்து ருசித்துக் குடித்த மித்ரா, தன்னுடைய லேப் டாப்பைத் திறந்து வேகவேகமாக டைப் செய்து கொண்டே பேச்சை ஆரம்பித்தாள்...''சொத்து வரி பிரச்னைதான், ஆளும்கட்சிக்கு ஆப்பு வைக்கும் போலிருக்கு...மக்கள்ட்ட கடுமையான அதிருப்தியா இருக்கு...ஆனா, கவுன்சிலர்கள் யாருமே அதைப் பற்றி
 நேரு, நேருன்னு சொல்றீங்களே...அது யாரு... அமைச்சரிடம் கேட்ட மேயரால்  அலறுது ஊரு!

வெயிலில் வியர்த்து வந்த மித்ராவுக்கு, சில்லென்று கரும்புச்சாறு கொடுத்து வரவேற்றாள் சித்ரா. அதை ரசித்து ருசித்துக் குடித்த மித்ரா, தன்னுடைய லேப் டாப்பைத் திறந்து வேகவேகமாக டைப் செய்து கொண்டே பேச்சை ஆரம்பித்தாள்...''சொத்து வரி பிரச்னைதான், ஆளும்கட்சிக்கு ஆப்பு வைக்கும் போலிருக்கு...மக்கள்ட்ட கடுமையான அதிருப்தியா இருக்கு...ஆனா, கவுன்சிலர்கள் யாருமே அதைப் பற்றி கவலைப்பட்டதா தெரியலை!'' ஆமோதித்த சித்ரா, அதற்குப் பதில் சொல்லத் துவங்கினாள்...

''சென்னையில 1998க்கு அப்புறம் பிராப்பர்ட்டி டாக்ஸ் ஏத்தவே இல்லை...நம்ம ஊருல 2008ல ஒரு தடவை உயர்த்தி, 14 வருஷமா கூடுதலாகக் கட்டிட்டு இருக்காங்க. இப்போ ரெண்டு பேருக்கும் ஏத்துறதால, சென்னைய விட நமக்கு டாக்ஸ் அதிகமா இருக்கு. அதைத்தான் குறைக்கணும்னு பல அமைப்புகளும் கேக்குறாங்க. இதைக் கூட இந்த கவுன்சிலர்க புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க,''''ஆமாக்கா...2008ல கவர்மென்ட் சொன்ன அளவை விட, குறைச்சுதான் டாக்ஸ் ஏத்தி தீர்மானம் போட்டாங்க. இப்போ இருக்கிறவுங்களுக்கு கவுன்சில் பவரே தெரியலை. வரியைக் குறைங்கன்னு கவுன்சில் மீட்டிங்ல தீர்மானம் நிறைவேத்தாம, கமிஷனர்ட்ட கெஞ்சுறாங்க,'' என்று கொந்தளித்தாள் மித்ரா. அதற்குள் குறுக்கிட்டாள் சித்ரா...''உண்மைதான் மித்து...நம்ம மேயர் அதுலயும் சூப்பர் ஸ்டார்...ஸ்கூல் பங்ஷன்லயே எழுதி வச்சுதான் படிக்கிறாங்க. பார்க்கிறவுங்க கழுவி ஊத்துறாங்க. சொத்துவரி பத்தி மீடியாக்காரங்க கேட்டா திணர்றாங்க. ஒண்ணுமே தெரியலை....அதை அவுங்களே உணர்ந்து, நம்ம ஊரு பொறுப்பு அமைச்சர்ட்ட போயி, 'அண்ணா! சொத்து வரி உயர்வைப் பத்தி மீடியாவுல கேட்டுக்கிட்டே இருக்காங்க.
என்னண்ணா சொல்றது'ன்னு கேட்ருக்காங்க,''''பரவாயில்லையே...அதுக்கு அவர் என்ன சொன்னாராம்?''''அவரு, 'நேரு சொன்னதைப் பார்த்து, அதே மாதிரி நீங்களும் சொல்லுங்கம்மா'ன்னு சொல்லிருக்காரு. அதுக்கு அடுத்த செகண்ட்டே கொஞ்சமும் யோசிக்காம, 'நேருன்னா யாருண்ணா'ன்னு அவுங்க கேட்க, 'ஏம்மா! உங்க துறை அமைச்சரே அவர்தாம்மா...முதல்ல அமைச்சரெல்லாம் பாத்துட்டு வாங்க'ன்னு சொல்லிட்டு, தலையில அடிச்சிட்டுக் கெளம்பீட்டாராம். இந்த தகவல் உடன்பிறப்புகள் மூலமா பரவி ஊரே சிரிக்குது,''இருவரும் சேர்ந்து சிரிக்க, சித்ராவே தொடர்ந்தாள்...''எலக்சன்ல ஜெயிச்ச பிறகு, மினிஸ்டர் கை ரொம்பவே ஓங்கிருச்சு மித்து... இப்போ உட்கட்சித் தேர்தல்ல பொறுப்பு வாங்குறதுக்கு, ஆளாளுக்கு அவரைக் காக்கா பிடிக்கிறாங்க''''அது பிடிச்சிட்டுப் போகட்டும்...அவரு இன்னிக்கு மானியக்கோரிக்கை மேல உரை நிகழ்த்துறாராம்.

அதுக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க., சார்புல, வாழ்த்தெல்லாம் சொல்லிருக்காங்க. கூடவே, 'அமைச்சரை சந்திக்க தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் சென்னைக்குப் போக வேண்டாம்'னு ஒரு அறிக்கை கொடுத்திருக்காங்க,''சித்ரா, பழைய மேட்டருக்குத் திரும்பினாள்...''சொத்து வரி உயர்வு, பவர்கட், ரோடுக மோசமா இருக்குறது எதைப் பத்தியும் கவலைப்படாம ரோட்டுக் கடை போடுறது, அங்க வசூல் பண்றதுன்னு கவுன்சிலர்கள் களத்துல தீவிரமா இருக்காங்க. அதுலயும் ரத்தினபுரி, சிவானந்தா காலனி ஏரியாவுல, 'மண்டலத் தலைவர்' பேருல புதுசு புதுசா கடை போடுறாங்களாம்.
ஏரியா பூரா தீவிர வசூல்ல இறங்கீட்டாங்களாம்''''அது மட்டுமில்லை மித்து...பவர்கட் பத்தி மக்கள்ட்ட கருத்துக் கேட்கப் போன ஒரு மீடியா கேமராமேனை பிடிச்சு, அவுங்க ஆளுங்க மெரட்டி, கேமராவைப் பறிச்சு, அதுல அவரு எடுத்த வீடியோவையெல்லாம் அராஜகமா அழிச்சிருக்காங்க. இதெல்லாம் அந்தம்மாவுக்குத் தெரியுமா தெரியாதான்னே தெரியலை,''''மிரட்டல்ன்னதும் ஞாபகம் வந்துச்சுக்கா...கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டப் போறோம்னு சோஷியல் மீடியாவுல, ஒரு குரூப் பயங்கரமா மெரட்டிட்டு இருந்துச்சு. கடைசியில சத்தமே இல்லாம அடங்கீட்டாங்க...எப்படி?''''அதை அறிவிச்ச அமைப்புகள் எல்லாமே, ஆளும்கட்சிக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவுங்கதான். அதனால, போலீசே ஆளும்கட்சிக்காரங்கள்ட்ட பேசி, 'ஏதாவது நடக்கக்கூடாதது நடந்துச்சுன்னா, கவர்மென்ட்டுக்குதான் சிக்கலு, கெட்ட பேரு...அதனால நீங்களே பேசி அவுங்கள 'ஆப்' பண்ணுங்கன்னு சொல்லிருக்காங்க.
அதுதான் 'ஒர்க் அவுட்' ஆயிருக்கு,''''ஆனா கவர்னர் கான்வாய் பாஸ் ஆகுற வரைக்கும், 'திக் திக்'ன்னுதான் இருந்தாங்க... மைக் அலறிட்டேதான் இருந்துச்சு,'' என்ற மித்ரா, அவளாகவே அடுத்த போலீஸ் மேட்டருக்குத் தாவினாள்...''ஸ்டேட் முழுக்க கஞ்சா, குட்கா, பான் பொருட்கள் விக்கிறவுங்க ஏழாயிரம் பேரை அரெஸ்ட் பண்ணி, தமிழ்நாடு போலீஸ் பேரு வாங்கிட்டு இருக்கு. ஆனா நம்ம ஊருல இன்னும் குட்கா விக்கிற கடைகள்ல, வழக்கம்போல வித்துட்டுதான் இருக்காங்க,''''யெஸ் மித்து...தொண்டாமுத்துார் ஏரியாவுல குறிப்பிட்ட சில மளிகைக் கடைகள்ல இப்பவும் விக்கிறாங்களாம். மாசாமாசம் தொண்டாமுத்துார் ஸ்டேஷனுக்கு, கடைக்கு ரெண்டாயிரம் மாமூல் கொடுக்குறாங்களாம்,''''அக்கா....சூலுார் லிமிட்ல நடக்குறதைக் கேட்டா தலை சுத்திரும்...மாவட்டத்துக்கே கஞ்சா, குட்கா, புகையிலை அத்தனையும் பதுக்குறது, சூலுார் ஏரியாதான்னு அந்தத் தொழில்ல இருக்கிறவுங்களே சொல்றாங்க. போலீசும், 200 கிலோ 250 கிலோன்னு டன் கணக்குல பிடிக்கிறாங்க. கண்ணம்பாளையம் ஏரியாவுலதான் ஏகப்பட்ட 'இல்லீகல்' குடோன் இருக்குதாம்,''''அதுல இன்னொரு அநியாயமும் நடக்குது...
தோட்டத்துக்குள்ள ஒவ்வொரு குடோனையும் 10 ஆயிரம், 15 ஆயிரம் அடின்னு கட்டி வச்சிருக்காங்க. ஆனா பேரூராட்சிகள்ல வெறும் ரெண்டாயிரம் சதுரஅடின்னு சொத்துவரி போடுறாங்க. இ.பி.யிலயும் சத்தமில்லாம கனெக்சன் கொடுத்துர்றாங்க. ஆக போலீஸ், பொலிட்டீஷியன், இ.பி., எல்லாருக்கும் குட்காவுல இருந்து காசு கொட்டுது. கண்ணம் பாளையத்துல இருக்குற, ஆளும்கட்சி பிரமுகர்கள் சில பேருதான் இதுக்குப் பின்னணியில இருக்குறதாச் சொல்றாங்க,''''இந்த மாதிரி இல்லீகல் வேலைகள், ரூரல் லிமிட்லதான் அதிகமா நடக்குது,''''உண்மைதான்...ஆலாந்துறை போலீசுக்கு வேற மாதிரி வசூல்...பூண்டி கோவில் சீசன் ஆரம்பிச்சிருச்சு. கோவில் வாசல்ல 'டெம்பரரி கடைகள்' எக்கச்சக்கமா போட்ருக்காங்க. அதுல பார்த்தா, பணம் கட்டி விளையாடுற மூணு கட்டை உருட்டுறது மாதிரி நிறையா சூதாட்டம் நடக்குது. ஆலாந்துறை போலீசுக்கு கடைக்கு இவ்வளவுன்னு காசு போகுது,''சித்ரா சொன்னதைக் கேட்ட மித்ரா, லேப்டாப்பில் தேடி, வரிசையாக சில படங்களைக் காண்பித்தாள். அவளே தொடர்ந்தாள்...
''அக்கா! பிப்ரவரியில, கோவைப்புதுார் ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல ஒன்றரை லட்சம் பணத்தைப் பிடிச்சாங்க. மார்ச்ல இன்கம்டாக்ஸ் துணை கமிஷனர் டேனியல்ராஜை, சி.பி.ஐ.,யே அரெஸ்ட் பண்ணுச்சு. ஏப்ரல்ல ஜே.டி.சி., உமாசக்தி கார்லயே 28 லட்ச ரூபா பிடிச்சிருக்காங்க. மாசத்துக்கு ஒரு பெரிய ஆபீசர் சிக்குறாங்க. அடுத்து யாரோன்னு, 'லஞ்ச ஆபீசர்கள்' எல்லாம் ஒரு விதமான பயத்துலதான் இருக்காங்க''''எத்தனை பேரை அரெஸ்ட் பண்ணாலும், இவுங்கள்லாம் திருந்த மாட்டாங்க...இதெல்லாம் விட கொடுமை, நம்ம ஜி.எச்.,ல நடக்குதுக்கா...அதென்ன ஜி.எச்.சா...லாட்ஜான்னு கேக்குற அளவுக்கு மோசமான விஷயமெல்லாம் நடக்குதாம்,''''என்ன மித்து சொல்ற...ஆச்சரியமா இருக்கு,''''ஆமாக்கா...கான்ட்ராக்ட்ல வேலை பாக்குற சில பொண்ணுங்களைப் பார்க்க, வெளியில இருந்து நிறைய ஆளுங்க வர்றாங்களாம். உள்ளேயே எல்லா வேலையும் நடக்குதாம்.ஜி.எச்., ஊழியர்கள் கொந்தளிச்சு, இதைக் கேட்கப்போயி, அடிதடியாகி, வெளியில இருந்து வந்த ஒரு ஆளுக்கு, கால்ல சதையே கிழிஞ்சு தொங்கிருக்கு. அவருக்கு அங்கேயே ட்ரீட்மென்ட் கொடுத்து, அவுட் போஸ்ட் போலீசையும் 'ஆப்' பண்ணி அமுக்கீட்டாங்க,''''இந்த கான்ட்ராக்ட் ஊழியர்களைக் கண்காணிக்கிற, ஜமேதார் ஒழுங்கா இருந்தா இதெல்லாம் நடக்குமா... அவருக்கு காசு வந்தா போதும்னு இருந்திருப்பாரு,'' என்ற சித்ரா, திடீரென 'பவர்கட்' ஆனதைப் பார்த்து, அடுத்த மேட்டருக்குத் தாவினாள்...

''குனியமுத்தூர் ஸ்டேஷன் ஏட்டு ஒருத்தர் வீட்டுல, இப்பிடித்தான் திடீர்னு பவர்கட் ஆனதும் கடுப்பான அவரு, ஏரியா இ.பி., ஏ.இ.,க்குக் கூப்பிட்டு தாறுமாறா திட்டிருக்காரு. அதை அவரு அப்பிடியே ரெக்கார்டு பண்ணி, நேரா போலீஸ் கமிஷனர்ட்ட போயி, கம்பிளைன்ட் பண்ணீட்டாராம். அந்தப் பேச்சைக் கேட்ட போலீஸ்காரங்களே அதிர்ந்து போயிட்டாங்களாம். கமிஷனர் போட்ட போடுல, ஏ.இ.,ட்ட ஏட்டு மன்னிப்புக் கேட்ருக்காரு,''''அக்கா! டாஸ்மாக் மாவட்ட ஆபீசர் பத்தி, போன வாரம் பேசுனோமே...அவரைப் பத்தி இன்னொரு புகார். பல ஏரியாவுல இல்லீகலா பார் நடத்துறதுக்கு 'அலவ்' பண்ணி, அதுலயும் காசு பாக்குறாராம். அன்னுார்ல இருக்குற நாலு கடையில, ஒரு கடையில 'இல்லீகல் பார்' நடக்குதாம். மாசம் மூணு லட்ச ரூபா அரசுக்கு இழப்பு. ஆபீசருக்கு எவ்வளவு போகுதோ தெரியலை,''''அதை விடு...ரெண்டு கட்சியிலயும் உட்கட்சித் தேர்தல் ஆரம்பிச்சிருக்காங்களே...ஒழுங்கா நடக்குதா?'' என்று சித்ரா கேட்க, ஆர்வமாய் பதில் சொன்னாள் மித்ரா...''அ.தி.மு.க.,வுல ஏற்கனவே பொறுப்புல இருந்தவுங்களுக்குதான் மறுபடியும் பதவி கொடுத்திருக்காங்க. பல பேரு, ரெண்டு பதவியில நீடிக்கிறாங்க.
தி.மு.க.,வுலயும் இதேதான் நடக்குதாம். மத்த ஏரியாவை விட சூலுார்ல இது அதிகமா நடக்குறதால, சீக்கிரமே அங்கதான் ரகளை ஆரம்பிக்கும்கிறாங்க,''மித்ரா சொல்லும்போது, வந்த அழைப்பை எடுத்துப் பேசிய சித்ரா, ''மித்து! சற்று முன் கிடைத்த தகவல்... ஆபீசர்கள் என்னை மதிக்கிறதே இல்லைன்னு முதல்வரை நேர்ல பார்த்து புகார் சொல்றதுக்கு, கார்ப்பரேஷன் கொடுத்த கார்லயே சென்னைக்குக் கிளம்பி இருக்காங்களாம் சிட்டி மம்மி...,'' என்றாள்.மீண்டும் 'பவர்' வந்ததில், ''அக்கா! ஒரு மெயில் அனுப்பணும். அப்புறம் பேசுவோம்,'' என்று வேலையில் தீவிரமானாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X