வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: லண்டனில் தங்கியுள்ள பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் திரும்ப வேண்டி, அவருக்கு 10 ஆண்டுகளுக்கு தற்காலிக விசா வழங்கியது பாக். அரசு.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமராக 2013 - 2017 வரை பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப், 71. பல்வேறு ஊழல் வழக்குகளில் பாக்., நீதிமன்றம் இவருக்கு சிறை தண்டனை விதித்து இருந்தது. மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நான்கு வாரங்களுக்கு பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்ல லாகூர் நீதிமன்றம் இவருக்கு அனுமதி அளித்திருந்தது.
இதையடுத்து 2019 நவ.,ல் நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். தன் விசா காலத்தை நீட்டிக்க பிரிட்டனின் உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது. பிரிட்டன் குடியுரிமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
![]()
|
தற்போது, பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழந்தது. புதிய அரசு ஏற்பட்டுள்ளது. பிரதமராக நவாஸ் ஷெ ரீப் சகோதாரர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இதையடுத்து நவாஸ் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதையடுத்து, விசா கோரி விண்ணப்பித்தார். அவருக்கு 10 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் தங்க விசா வழங்கி பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.