பள்ளி மாணவர்கள் மொபைல் எடுத்து வர தடை: வேலூர் கலெக்டர் அதிரடி

Updated : ஏப் 26, 2022 | Added : ஏப் 26, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
வேலூர்: வேலூரில் பள்ளி வகுப்பறைகளுக்கு மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்படுவதாகவும், இதனை மீறினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியுள்ளார்.சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், வேலுார் அருகே தொரப்பாடி அரசு பள்ளி வகுப்பறையில், மாணவியர் முன், பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் வீரத்தை காட்ட, இரும்பாலான
மாணவர்கள், மொபைல்போன், தடை, கலெக்டர், குமாரவேல்பாண்டியன்,

வேலூர்: வேலூரில் பள்ளி வகுப்பறைகளுக்கு மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்படுவதாகவும், இதனை மீறினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், வேலுார் அருகே தொரப்பாடி அரசு பள்ளி வகுப்பறையில், மாணவியர் முன், பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் வீரத்தை காட்ட, இரும்பாலான இருக்கை மற்றும் மேஜைகளை உடைக்கும் வீடியோ வெளியானது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி, வேலுார் ஆர்.டி.ஓ., பூங்கொடி, மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் ஆகியோர் நேற்று( ஏப்.,25) அப்பள்ளியில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சம்மந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோரை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரச்செய்து, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விசாரணை நடத்தினார். அப்போது, பள்ளியில் பிரிவு உபசார விழா நடத்த மாணவர்கள் கேட்டதற்கு, தலைமை ஆசிரியர் அனுமதிக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மேஜை, நாற்காலிகளை உடைத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவர்கள் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


latest tamil news


இந்நிலையில், வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் வெளியிட்ட அறிக்கை: மாணவர்கள் பள்ளிக்கு மொபைல்போன் எடுத்து வர தடை விதித்துள்ளது. மொபைல் போன் எடுத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரவை மீறி வகுப்பறைக்குள் மொபைல்போன்களை மறைத்து எடுத்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஏப்-202218:21:15 IST Report Abuse
SUBBU,MADURAI தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் CCTV camera பொருத்த வேண்டும்.
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
26-ஏப்-202218:11:28 IST Report Abuse
K. V. Ramani Rockfort வேலூர் மாவட்ட ஆட்சியர் போல அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அதிரடியாக செயல்பட்டால், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நல்லதுதான்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
26-ஏப்-202217:26:06 IST Report Abuse
a natanasabapathy முட்டாள் தனமான உத்திரவு மாணவர்களிடம் மொபைல் இருந்ததினால் தான் அங்கு நடக்கும் அட்டூழியங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன .அவற்றை மூடி மறைக்க ஆட்சியர் முயல்கிறார் .இவர் ஒவ்வொரு வகுப்பறையிலும் cctv கேமரா பொருத்திவிட்டு இந்த உத்திரைவை பிறப்பித்து இருக்கவேண்டும் .இந்த உத்தரிவினால் மாணவர்களுக்கு தைரியம் melum அதிகமாகி வன்முறையில் ஈடுபடுவார்கள் . ஆட்சியர் என்றால் கண்ட உத்திரவுகளையும் கண்ணை மூடிக்கொண்டு பிறப்பித்து விடலாமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X