ஆத்தூர் அருகே பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை: வாலிபருக்கு தூக்கு தண்டனை

Updated : ஏப் 26, 2022 | Added : ஏப் 26, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
ஆத்தூர்: வீட்டில் பூ கட்டிக்கொண்டிருந்த, 14 வயது பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்த, வாலிபருக்கு சேலம் போக்சோ நீதிமன்றம், இன்று தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி ஊராட்சி சுந்தரபுரத்தில் வசிக்கும் 14 வயது பள்ளி மாணவி, கடந்த, 2018, அக்டோபர், 22ம் தேதி, இரவு, 7:30 மணியளவில், வீட்டில் மல்லிகை பூ கட்டிக்கொண்டிருந்தார்.
மாணவி கொலை, வாலிபர், தூக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆத்தூர்: வீட்டில் பூ கட்டிக்கொண்டிருந்த, 14 வயது பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்த, வாலிபருக்கு சேலம் போக்சோ நீதிமன்றம், இன்று தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி ஊராட்சி சுந்தரபுரத்தில் வசிக்கும் 14 வயது பள்ளி மாணவி, கடந்த, 2018, அக்டோபர், 22ம் தேதி, இரவு, 7:30 மணியளவில், வீட்டில் மல்லிகை பூ கட்டிக்கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த, நெல் அறுவடை இயந்திர டிரைவர் தினேஷ்குமார், 25, அரிவாளுடன் வந்துள்ளார். மாணவியின் கழுத்தை அறுத்து, உடலை வெளியே இழுத்து சென்றார்.

இதை பார்த்த அவரது தாய் கதறி அழுதபடி ஓடினார். பின்னர், மாணவியின் தலையை மட்டும், தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு, சாலை 'முச்சந்தியில்' வைத்துவிட்டு, தினேஷ்குமார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் வந்ததை பார்த்த அவரது மனைவி சாரதா, தம்பி சசிக்குமார் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். மாணவியை வெட்டி கொலை செய்தது தெரியவந்ததால், தினேஷ்குமாரை இரவு, 8:30 மணியளவில், ஆத்தூர் ஊரக போலீசில் ஒப்படைத்தனர்.

சிறுமி கழுத்தறுத்து கொலை வாலிபருக்கு தூக்கு சேலம் கோர்ட் தீர்ப்பு | Murder Case Judgement | Salem | Dinamalar


latest tamil news


இந்த வழக்கு, இன்று, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், மாணவியை கொடூரமாக கொலை செய்த தினேஷ்குமாருக்கு, தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அவருக்கு 26,000 ரூபாய் அபராதம் விதித்தார். இத்தொகையை மாணவியின் தாயாரிடம் வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
26-ஏப்-202219:17:15 IST Report Abuse
Cheran Perumal சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தூக்கு தண்டனைக்கு வாய்ப்பே இல்லை. குற்றவாளியாக இருந்தாலும் அவருக்கும் எதிர்காலம் உண்டு என்பது நீதிமன்றத்தின் கருத்து.
Rate this:
Cancel
Sampath - Chennai,இந்தியா
26-ஏப்-202218:01:09 IST Report Abuse
Sampath 26000 oru uirin vilai.
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
26-ஏப்-202217:42:43 IST Report Abuse
radha இவனே மாதிரி ஆளுக்குத்தான் நம்ம நடுநிலை நாளிதழ், வந்துள்ளார்,இழுத்து சென்றார்,அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்ன்னு ரொம்ப மரியாதை கொடுக்கும். நடுநிலை உண்மையிலே நீ ரொம்ப நல்லவன்டா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X