தமிழகத்தில் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை: சுகாதார செயலர் கருத்து

Updated : ஏப் 27, 2022 | Added : ஏப் 26, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை : ''தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் சூழலும், மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் வாய்ப்பும் இல்லை,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை கிண்டி கிங் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனையின் இயக்குனர் நாராயணசாமி
TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ''தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் சூழலும், மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் வாய்ப்பும் இல்லை,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை கிண்டி கிங் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனையின் இயக்குனர் நாராயணசாமி உடனிருந்தார்.

பின், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:சென்னை ஐ.ஐ.டி.,யில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 19ம் தேதி துவங்கி, அங்கு நோய் தொற்று பரவி வருகிறது. ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள 7,490 பேரில், 3,080 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா சுகாதாரத்துறை விளக்கம்

அதில் நேற்று மேலும் 32 பேர் உட்பட, 111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் குணமடைந்தனர்; நான்கு பேர் கூட்டு நோய் கண்டறியப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் பதற்றமடைய வேண்டாம். முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி கடைப்பிடித்தல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், 29ல் கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை. ஒன்பது மாவட்டங்களில் மட்டும் கொரோனா உள்ளது. தமிழகத்தில் 1,000 பேருக்கு பரிசோதனை செய்தால், மூன்று பேருக்கு தான் தொற்று உறுதியாகிறது. எனவே, நோய் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் அவசியம் தற்போது இல்லை. அதனால், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை. தேவையற்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும்.


latest tamil news
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கோடைக் காலத்திற்கு தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மருத்துவமனைகளில் மின் வெட்டு பிரச்னை இல்லை.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும், 'ஜெனரேட்டர்' வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
26-ஏப்-202220:46:44 IST Report Abuse
SUDHAKAR இன்றும் சட்ட சபை நிகஸ்ச்சிகளில் சபாநாயகர் உட்பட பெருன்பான்மை உறுப்பினர்கள் மாஸ்க் அணியவில்லை. இப்படி இருக்கையில் எப்படி பொது மக்களை கேட்க முடியும்.
Rate this:
Cancel
Sriniv - India,இந்தியா
26-ஏப்-202217:03:01 IST Report Abuse
Sriniv There is no reason to make this statement except that he's trying to deny the obvious... at least Sunday lockdowns are imminent.
Rate this:
Cancel
26-ஏப்-202215:44:57 IST Report Abuse
ஆரூர் ரங் ரம்ஜான் பண்டிகை நெருங்கி🤣 வருதே. ஓசி பிரியாணிக்கு காய்ந்து கிடக்கும் ஆசைப்படும் திரா. எம்எல்ஏ க்க‌ள் சும்மா விடுவார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X