புது வீடு, கார், பைக் என ஏகபோக ஜாலி; கட்டு கட்டாக பணம் திருடிய கட்டட மேஸ்திரிகள்

Updated : ஏப் 27, 2022 | Added : ஏப் 27, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
திருப்பூர் : கட்டட வேலை செய்ய வந்த வீட்டில், கட்டுக்கட்டாக பணம் திருடிய மேஸ்திரிகள் மற்றும் தொழிலாளர்கள் போலீசில் சிக்கினர்.திருப்பூர், குள்ளேகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, 73. பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவன வளாகத்திலேயே வீடும் உள்ளது. இவருக்கு, மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. வீட்டில் துரைசாமி, அவரது மனைவி தனலட்சுமி
theft, arrest, Tiruppur

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர் : கட்டட வேலை செய்ய வந்த வீட்டில், கட்டுக்கட்டாக பணம் திருடிய மேஸ்திரிகள் மற்றும் தொழிலாளர்கள் போலீசில் சிக்கினர்.

திருப்பூர், குள்ளேகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, 73. பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவன வளாகத்திலேயே வீடும் உள்ளது. இவருக்கு, மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. வீட்டில் துரைசாமி, அவரது மனைவி தனலட்சுமி மட்டும் வசிக்கின்றனர். இந்த வீட்டுக்கு எதிரே, துரைசாமிக்கு சொந்தமான பழைய வீடும் உள்ளது; அதை பயன்படுத்துவதில்லை.

கடந்த ஜன., 3ல் தன் பழைய வீட்டில், 2 சவரன் நகை, 1.50 லட்சம் ரூபாய் மற்றும் பத்திரங்களின் நகல்கள் திருடு போனதாக துரைசாமி போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக, திருவண்ணாமலையை சேர்ந்த கட்டட மேஸ்திரிகள் சதீஷ், 29, அவரது தம்பி சக்தி, 24, தொழிலாளர்கள் தாமோதரன், 33 மற்றும் ராதாகிருஷ்ணன், 53 ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

வசமாக சிக்கிய கட்டட மேஸ்திரிகள் | Theft | Dinamalar

துரைசாமி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை, மூட்டை கட்டி மூன்று முறை கொள்ளையடித்தது தெரிந்தது. கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது கூட தெரியாமல், மூன்றாவது முறையாக பணம் திருடப்பட்ட பின்னரே, துரைசாமி போலீசில் புகார் செய்துள்ளார்.


latest tamil news


போலீசார் கூறியதாவது: கடந்த 2020 நவம்பரில் நான்கு பேரும் துரைசாமியின் பழைய வீட்டில் காம்பவுண்ட் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வீட்டின் ஓர் அறையில், பணம் கட்டுக்கட்டாக வெள்ளை துணிப்பையில் மூட்டையில் கட்டி துரைசாமி வைத்துள்ளார்.இதை மோப்பம் பிடித்த கொள்ளையர்கள், முதல் தடவை பணத்தை மூட்டையாக கட்டி, கொள்ளையடித்து சென்றனர். அதன்பின், டிச., மற்றும் ஜன., மாதம் மீண்டும் கொள்ளையடித்தனர். இவ்வாறு 2 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.சொகுசு வாழ்க்கை


கொள்ளை அடித்த பணத்தில், மூன்று மாதங்களாக திருப்பூர், திருவண்ணாமலையில் ஜாலியாக செலவு செய்து, சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளனர். சகோதரர்கள் சதீஷ், சக்தி ஆகியோர் திருவண்ணாமலையில், புதிய கார், புல்லட் இரு சக்கர வாகனம் வாங்கி வலம் வந்துள்ளனர். கட்டட தொழிலாளர்கள் திடீரென சொகுசு வாழ்க்கை பற்றி அறிந்த போலீசார் நால்வரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 சவரன் நகை, 16 லட்சம் ரூபாய், இரண்டு கார், இரண்டு டூ - வீலர், நான்கு வீட்டு பத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.ஆளுக்கொரு வீடு


திருப்பூர் துரைசாமி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில், நான்கு பேரும், வீரபாண்டி, கணபதிபாளையம், மங்கலம் ரோடு ஆகிய இடங்களில், ஆளுக்கொரு வீடுகளை, இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கியுள்ளனர்.அதன்பின், ஒரு புதிய கார், புல்லட் பைக் மற்றும் தங்க நகைகளை வாங்கியுள்ளனர். மிச்சமிருந்த பணத்தை சொகுசாக செலவு செய்து, 'ஜாலி'யாக ஊர் சுற்றியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
27-ஏப்-202218:34:48 IST Report Abuse
RaajaRaja Cholan பல நாள் திருடன் ஒரு நாள்
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
27-ஏப்-202212:17:16 IST Report Abuse
அம்பி ஐயர் கோடிக் கணக்கான ரூபாயை ஒழுங்காக வரி கட்டி வெள்ளையாக்கியிருந்தால் அக்கவுண்டிலேயே இருந்திருக்கும்.... இப்போ கொள்ளை போனது எத்தனை கோடின்னு கூடத் தெரியாமல் ஒருத்தர் இருக்காருன்னா அவரிடம் எவ்வளவு பணாம் இருந்திருக்க வேண்டும்.... முறையாக விசாரித்து அவரது வருமானத்திற்கு வரி அபராதம் வட்டி என அனைத்தையும் வசூலிக்க வேண்டும்....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
27-ஏப்-202210:25:56 IST Report Abuse
duruvasar கூட்டு கொள்ளை கூட்டு பலாத்காரம் என ட்ராவிடின் மாடல் களை கட்ட தொடங்கிவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X