தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கியது: 11 பேர் பலி, 13 பேர் காயம்

Updated : ஏப் 28, 2022 | Added : ஏப் 27, 2022 | கருத்துகள் (65) | |
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் பலியான நிலையில், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர
தஞ்சை,கோவில் திருவிழா, மின்சாாரம் பாய்ந்து, 10 பேர் ,பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் பலியான நிலையில், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா நேற்று தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது. தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம் வைத்து படையல் செய்து வழிபட்டனர்.

புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன்,22, முன்னாள் ராணுவ வீரர் பிரதாப்,36, அன்பழகன்,60, இவரது மகன் ராகவன்,24, நாகராஜ்,60, சந்தோஷ்,15, செல்வம்,56, ராஜ்குமார்,14, சாமிநாதன்,56, கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தஞ்சையில் கோர சம்பவம் | Temple Car| Fire Accident | Dinamalar

மேலும் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன்,48, கலியமூர்த்தி,40, ஹரிஷ் ராம்,10, நித்தீஷ் ராம்,13, மாதவன்,22, மோகன்,54, விஜய்,23, அரசு,19, விக்கி,21, திருஞானம்,36, ஹரிஷ்,11, மதன் மனைவி சுகுந்தா,33, பி. கௌசிக்,13, பரணி,13,ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


latest tamil news


தகவலறிந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து களிமேடு கிராமத்திற்கு சென்ற இடத்தை பார்வையிட்டார். சம்பவம் குறித்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி, மாவட்ட எஸ்.பி, ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.


latest tamil news


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‛தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தேர் வரும் வழியில் தண்ணீர் ஊற்றப்பட்டு வந்ததால் மின்சாரம் பாய்ந்தபோது பாதிப்பு அதிகமாகி விட்டது' என தெரிவித்தனர்.புலன் விசாரணை


தேர் திருவிழாவில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: களிமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சப்பர இழுப்புத் திருவிழா நடைபெறும். இப்போது தேர் இழுக்கும்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் பாதையில் சப்பரத்தின் உச்சிப்பகுதி உரசியது. இது எப்படி உரசியது என்பது விசாரணையில் தெரிய வரும்.


latest tamil news


இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் நிகழ்விடத்திலும், 8 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இறந்தனர். மேலும் காயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது என வழக்குப்பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் முழு விவரங்கள் தெரிய வரும். குறைந்த மின் அழுத்த பாதை ஏற்கெனவே அணைக்கப்பட்டிருந்தது. உயர் மின்னழுத்த பாதை மூலம் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


முதல்வர் ஆறுதல்


இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தினை முதல்வர் வாசித்தார். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


latest tamil news


மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதல்வர் ஸ்டாலின் மதுரை வழியாக தஞ்சாவூர் சென்றார். களிமேடு கிராமத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண நிதியையும் வழங்கினார். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28-ஏப்-202201:11:55 IST Report Abuse
Ramesh Sargam இந்த விபத்துக்கு ஒட்டுமொத்தமாக அரசை குறைகூறிவிடமுடியாது. தேர்த்திருவிழா நடத்திய கோவில் நிர்வாகிகள் பொறுப்பாக சம்பந்தப்பட்ட மின்துறைக்கு, காவல்துறைக்கு திருவிழா பற்றி தெரியப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த விபத்து ஏட்பட்டிருக்கவே ஏட்பட்டிருக்காது. சாமி குத்தம், என்று சாமி மீது பழி பழிபோடுவதும் சரியல்ல.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
27-ஏப்-202218:06:11 IST Report Abuse
Krishnamurthy Venkatesan திருவிழா கமிட்டீயினர் திருவிழா தொடங்குவதற்கு சில நாட்கள் முன் வருவாய்த்துறை, காவல் துறை, மின்சார துறை, தீயணைப்பு துறை போன்றவர்களுக்கு எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் சரியான பாதுகாப்பு கொடுப்பார்கள். அவ்வாறு பாதுகாப்பு கொடுக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களும், அரசும் பொறுப்பாகும்.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
27-ஏப்-202215:42:35 IST Report Abuse
தியாகு இதுமாதிரி நிகழ்வுகள் கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் விடியாத ஆட்சியில் அடிக்கடி நடப்பது தெய்வம் ஏதோ சொல்ல நினைக்கிறது என்று அர்த்தம். திருந்துவாரா?
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
28-ஏப்-202200:48:29 IST Report Abuse
Priyan Vadanadதிருந்தவேண்டியது ஹிந்து பேரை சொல்லி எனதருமை ஹிந்து சகோதர சகோதரிகளை ஏமாற்றும் பேர்வழிகள்தான்....
Rate this:
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
28-ஏப்-202218:21:23 IST Report Abuse
மிளிர்வன்அதானே..? ஹிந்து பேர வச்சிக்கிட்டு.. அரசாங்க கோட்டாவ தின்னுகிட்டு.. மதமாத்தி வேல பாத்துகிட்டு.. அடுத்தவன் மேல பழி போட்டே பழகுன நாங்க திருந்துவோமா..?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X