அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் தேர் திருவிழா: அமைச்சர்

Updated : ஏப் 27, 2022 | Added : ஏப் 27, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை: தஞ்சாவூரில் அருகே நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தது குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தேர்த்திருவிழா நடப்பது குறித்து கிராம மக்கள் அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறியுள்ளார்.தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11
தேர்த்திருவிழா, அமைச்சர், சேகர்பாபு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தஞ்சாவூரில் அருகே நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தது குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தேர்த்திருவிழா நடப்பது குறித்து கிராம மக்கள் அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறியுள்ளார்.



தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் பலியான நிலையில், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



இந்த சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கம்: திருவிழா நடப்பது குறித்து அரசுக்கு, கிராம மக்கள் தகவல் தெரிவிக்கவில்லை. கிராம மக்களே ஒன்று சேர்ந்து தேர்த்திருவிழாவை நடத்தி உள்ளனர். களிமேடு பகுதியில் நடந்தது தேர் திருவிழாவும் அல்ல. அது தேரும் அல்ல. அது சப்பரம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.



ஒரு நபர் குழு

இதனிடையே, தஞ்சாவூர் தேர் விபத்து குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படுவதாகவும், விபத்துக்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கு குழு அமைக்கப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nv -  ( Posted via: Dinamalar Android App )
28-ஏப்-202208:41:26 IST Report Abuse
nv தார்மீக பொறுப்பு ஏற்று அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும். அப்போது தான் நேர்மையான ஒரு விசாரணை நடத்த முடியும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-ஏப்-202206:40:57 IST Report Abuse
Mani . V தெரிவித்து இருந்தால்? டாஸ்மாக்குக்கு வரிசை கட்டி செல்ல போலீசை நியமிக்க முடிகிற அரசுக்கு, இதற்கெல்லாம் கவனம் செலுத்த முடியவில்லை.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
27-ஏப்-202218:06:26 IST Report Abuse
sankar அப்படி எனில் - அந்த ஊர் தலைவர் என்ன செய்து கொண்டு இருந்தார் - வி ஏ ஓ என்ன தன கடமையில் தவறி விட்டார் - மற்ற அரசு நிர்வாகங்கள் என்ன செய்து கொண்டு இருந்தன - அரசுக்கு தெரியுமோ தெரியாதோ பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும் - மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும் - அப்படி செயாததுதான் இந்த நிகழ்விற்கு காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X