வரியை குறைக்காத தமிழகம், தெலுங்கானா, மே.வங்கம்: முதன்முறையாக மோடி குற்றச்சாட்டு

Updated : ஏப் 27, 2022 | Added : ஏப் 27, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி: தமிழகம், மே.வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.அனைத்து முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், தமிழகம், மேற்கு வங்கம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற
பிரதமர், எரிபொருள், தமிழகம், மோடி, பெட்ரோல், வரி,

புதுடில்லி: தமிழகம், மே.வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அனைத்து முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், தமிழகம், மேற்கு வங்கம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரி குறைக்கப்படவில்லை. இங்கு வரி அதிகமாக உள்ளது.


latest tamil news




இது அங்குள்ள மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதனால், அம்மாநில மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தேசிய நலன் கருதி வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.



அச்சுறுத்தல் நீங்கவில்லை



முன்னதாக, கோவிட் பரவல் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி பேசியதாவது: கோவிட் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. நாம் இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும். வயது வந்தோரில் 96 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டது, குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.

பொது இடங்களில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை இன்னும் ஊக்கப்படுத்த வேண்டும். மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பை அதிகப்படுத்துவது முக்கியம். மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jose - Thoothukudi,இந்தியா
27-ஏப்-202218:38:03 IST Report Abuse
Jose காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ஒரு லிட்டர்கு 9.48 ரூபாய், டீசல் மீதான வரி ஒரு லிட்டர்கு 3.56 ரூபாய் ஆனால் தற்போதையை பிரதமர் மோடிஜி யின் பிஜேபி யின் ஆட்சியில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ஒரு லிட்டர்கு 27.90 ரூபாய், டீசல் மீதான வரி ஒரு லிட்டர்கு 21.80 ரூபாய். இதிலிருந்து நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை யார் குறைக்கவேண்டும்மென்று.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-ஏப்-202218:32:50 IST Report Abuse
sankaseshan உண்மையை சொன்னால் குன்றிய அரசுக்கு பிடிக்காது மக்களை முட்டாளாகவே வைத்திருக்க வேண்டும் எரிபொருள் விலையை GST க்குள் கொண்டுவர சொன்னால் விலை குறையும் ஆன்னா மாட்டார்கள் மத்திய அரசை குறை சொல்லியே அரசியல் செய்யவேண்டும் அதுவே காரணம்
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
27-ஏப்-202218:26:18 IST Report Abuse
Easwar Kamal ஏன் ஆந்திராவை விட்டுடீங்க. இந்த ஆந்திராவும்/தெலுங்கானாவும் தான் இந்தியா பொருளாதாரத்துக்கு ஆப்பு வைக்கின்ற மாநிலங்கல். அங்கே எல்லாம் இலவசம் போட்டி போட்டுகொண்டு இலவசங்களை அல்லி வீசுகின்ற மாநிலங்கள். குறிப்பாக திரைத்துறைக்கு மானியங்கள் அல்லி வீசுகிறார்கள். இந்த ரெண்டு மாநிலங்கள் முழுவதுமாக மோடி அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X