அயோத்யா மண்டபம்: அறநிலையத்துறை உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்

Updated : ஏப் 27, 2022 | Added : ஏப் 27, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
சென்னை: சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை எடுத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.சென்னை, மேற்கு மாம்பலத்தில் 'ஸ்ரீராம் சமாஜ்' என்ற அமைப்பின் சார்பில் 1954ல் அயோத்யா மண்டபம் கட்டப்பட்டது. ராமன், சீதை, லட்சுமணன், ஹனுமான் உருவப் படங்களை வைத்து, இங்கு பூஜைகள் நடக்கின்றன.இதை கோவிலாக கருதி, தக்காரை நியமித்து, ஹிந்து சமய
அயோத்யா மண்டபம், சென்னை ஐகோர்ட், சென்னை உயர்நீதிமன்றம், அறநிலையத்துறை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை எடுத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்னை, மேற்கு மாம்பலத்தில் 'ஸ்ரீராம் சமாஜ்' என்ற அமைப்பின் சார்பில் 1954ல் அயோத்யா மண்டபம் கட்டப்பட்டது. ராமன், சீதை, லட்சுமணன், ஹனுமான் உருவப் படங்களை வைத்து, இங்கு பூஜைகள் நடக்கின்றன.இதை கோவிலாக கருதி, தக்காரை நியமித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை 2013 டிசம்பரில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பு, 2014 ல் வழக்கு தொடுத்து, இடைக்கால தடை உத்தரவு பெற்றது.

இவ்வழக்கில், நீதிபதி வி.எம்.வேலுமணி பிறப்பித்த உத்தரவு:சிலைகள் நிறுவியது; பூஜைகள் நடப்பது தொடர்பாகவும், சமாஜ் அமைப்பு பொது கோவிலா, இல்லையா என்பது தொடர்பாகவும் சர்ச்சை உள்ளது. இந்த சர்ச்சைக்கு, ரிட் வழக்கில் முடிவு காண முடியாது. தகுந்த அமைப்பில், மனுதாரர் வழக்கு தொடரலாம். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து, ஸ்ரீராம் சமாஜ் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவில் 'ஆகம சாஸ்திரப்படி, கடவுள் சிலை எதுவும் நிறுவப்படவில்லை. வழக்கில் எழுப்பப்பட்ட பல முகாந்திரங்களை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை' என கூறப்பட்டுள்ளது.


latest tamil news


மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' விசாரணை நடத்தியது.இந்த பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அறநிலையத்துறையின் உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதியின் உத்தரவும், கோவிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரியை நியமித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விடியல் குமார் மதுரை என்ன ஆணவமாப் பேசுனாங்க....இப்போ நீதிமன்ற தீர்ப்பு வந்தாச்சு.....பேசுனது என்னாச்சு ?..
Rate this:
Cancel
28-ஏப்-202212:22:06 IST Report Abuse
ஆரூர் ரங் ஊழல் இருப்பதால் அயோத்தியா மண்டபத்தை எடுத்துக் கொள்வோம் என்று அரசு கூறுவது நகைப்புக்குரியது 😉 அரசின் மீதே ஊழல் புகார்கள் இருக்கும்போது அது எப்படி இன்னொரு நிறுவனத்தை நேர்மையாக நிர்வகிக்க முடியும்?
Rate this:
Cancel
seth - pondi,இந்தியா
28-ஏப்-202206:08:54 IST Report Abuse
seth இந்து அறநிலைய துறை கோவில் பணத்தை இந்து மதத்திற்கும் இந்துக்களுக்கும் சுருட்டி மற்ற மதத்திற்கு கொடுக்கிறது . இதனால் இந்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன் இல்லாமல் இந்து மதம் அழிய ஏற்பாடு நடக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X