அரசியல் செய்பவர்களிடம் அரசியல் செய்ய விரும்பவில்லை: ஸ்டாலின் பேட்டி

Updated : ஏப் 27, 2022 | Added : ஏப் 27, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
தஞ்சாவூர்: தேர் திருவிழா விபத்து குறித்து சிலர் அரசியல் செய்ய விரும்புகின்றனர். அதற்கு பதில் சொல்லவும், அரசியல் செய்யவும் விரும்பவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழாவில், அதிகாலையில் நடந்த தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
DMK,MKStalin,Stalin,திமுக,ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தஞ்சாவூர்: தேர் திருவிழா விபத்து குறித்து சிலர் அரசியல் செய்ய விரும்புகின்றனர். அதற்கு பதில் சொல்லவும், அரசியல் செய்யவும் விரும்பவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழாவில், அதிகாலையில் நடந்த தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண தொகையை வழங்கினார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறி சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.


ஞ்சாவூரில் உள்ள களிமேடு கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இறந்த 11 பேர் உடல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியையும் அவர் வழங்கினார். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சென்று, அவர்களிடமும் நலம் விசாரித்தார். சம்பவம் நடந்த இடத்துக்கும் சென்று ஸ்டாலின் ஆய்வு செய்தார். #Stalin #thanjavur #FireAccident #Death #Stalinliveupdate

latest tamil news




பின்னர் ஸ்டாலின் அளித்த பேட்டி:

விபத்து குறித்து அறிந்ததும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட அனுப்பி வைத்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அரசின் சார்பில் ஆறுதலை கூறியதுடன், நிவாரண தொகையை வழங்கினேன். படுகாயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்


latest tamil news



இச்சூழலை பயன்படுத்தி கொண்டு, இதனை அரசியலாக்க சிலர் விரும்புகின்றனர்.அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அரசியல் செய்ய விரும்பவில்லை. மக்களுக்கு துயரம் ஏற்படாமல் தடுப்பது அரசின் நோக்கம். மக்கள் துயரத்தில் இருக்கும் போது அதில் பங்கு கொண்டு அரசு இருக்க வேண்டும் என்பது இலக்கு. அதனை நோக்கியே பயணிப்போம் என்பதை சொல்ல கடமைப்படடுள்ளேன். விபத்து ஏன் நடந்தது குறித்து ஆய்வு நடக்கிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஏப்-202216:36:36 IST Report Abuse
kulandai kannan பின் அவியல் செய்யப் போகிறாரா??
Rate this:
Cancel
விடியல் குமார் மதுரை அப்ப அவியல் பண்ணுனது யாரு? அது நாற வாயோ?
Rate this:
Cancel
28-ஏப்-202212:19:18 IST Report Abuse
ஆரூர் ரங் அரசியலும் செய்ய வராது அவியலும் செய்ய வராது😇😇 வெறும் தத்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X