தி.மு.க., தான் முதல் எதிரி: சூடேற்றினார் அமித் ஷா

Updated : ஏப் 28, 2022 | Added : ஏப் 28, 2022 | கருத்துகள் (223) | |
Advertisement
''தி.மு.க.,தான் நம் 'நம்பர் ஒன்' எதிரி'' என, தமிழக பா.ஜ., தலைவர்களிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.பா.ஜ.,வை சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் சென்னைக்கு வந்தார். அவர் கவர்னர் மாளிகையில் தங்குவார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆவடியில் தங்கினார். அங்கு அவரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த
BJP, Amit Shah, DMK, CM MK Stalin, MK Stalin, Stalin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

''தி.மு.க.,தான் நம் 'நம்பர் ஒன்' எதிரி'' என, தமிழக பா.ஜ., தலைவர்களிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பா.ஜ.,வை சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் சென்னைக்கு வந்தார். அவர் கவர்னர் மாளிகையில் தங்குவார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆவடியில் தங்கினார். அங்கு அவரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் ரகசியமாக சந்தித்தனர்.

அவர்கள் அமித் ஷாவிடம், 'தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மதமாற்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. 'இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், அங்கிருந்து பலர் தமிழகத்துக்கு வருகின்றனர். அவர்களுடன் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் வரும் அபாயம் உள்ளது' என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின், தன்னை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில நிர்வாகிகளிடம், அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்களிடம், 'பா.ஜ.,வுக்கு தி.மு.க., தான் நம்பர் ஒன் எதிரி. அதனால் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும். 'இதற்கு, பா.ஜ., தலைமை முழு ஆதரவு அளிக்கும்' என, அமித் ஷா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


latest tamil news


தமிழகத்தில் மதமாற்றம் நடப்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்து அறிக்கை வழங்கவும், அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அமித் ஷா, டில்லி திரும்பும் முன், 'யு டியூப்' சமூக ஊடகவியலாளர்கள் 25 பேரை அவரிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிமுகப்படுத்தினார். அவர்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அமித் ஷாவிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த அமித் ஷா, 'தமிழகத்தில் மவுனப்புரட்சி நடக்கிறது' என தெரிவித்ததாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன. 'வரும் 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் குறைந்தது ஐந்து தொகுதிகளிலாவது பா.ஜ., வெற்றி பெற வேண்டும்' என, தமிழக தலைவர்களிடம் அமித் ஷா வலியுறுத்தியதாகவும், அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (223)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RRR - Nellai,இந்தியா
29-ஏப்-202209:39:29 IST Report Abuse
RRR மொத்தமுள்ள 211 கருத்துக்களில் விசு அய்யர் என்ற ஒரு போலி ஐயர்... இந்துப்பெயரில் ஒளிந்திருக்கும் ஒரு திராவிஷ விஷமிப்பயல், ஒரு தீயமுக சொம்புப்பயல் கிட்டத்தட்ட 50 கருத்துக்களை இங்கே பதிவிட்டுள்ளான்...
Rate this:
Cancel
29-ஏப்-202205:59:24 IST Report Abuse
இவன் விசு அய்யர் மாதிறி ஆளுங்க புலம்பல் 🤣🤣🤣
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
29-ஏப்-202217:14:58 IST Report Abuse
Visu Iyerபுலம்பலா...? பாஜகவே கலங்கள் என்ற நிலைக்கு அல்லவா போயிட்டுது.. அந்த பக்கம் பாருங்க.....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஏப்-202205:32:41 IST Report Abuse
Kasimani Baskaran தமிழன் முக்காலத்திலும் தமிழன்தான். அவனை திராவிடன் என்று உருட்டும் வந்தேறிகளை விரட்டியடிப்போம். அரை நூற்றாண்டாக திராவிடம் என்று சொல்லி வளர்ந்தது இவர்களின் அறக்கட்டளைகளின் சொத்தும், இவர்களின் தனிப்பட்ட சொத்துக்களும்தான். கும்மிடிப்பூண்டியைத்தாண்டி திராவிடம் வளர்ந்ததாக சரித்திரத்தில் ஒரு வரி கூட இல்லை. திராவிடத்தை நம்பும் மொக்கைகள் இங்கு பதிவிடும் கருத்துக்களைப்பார்த்தால் இவர்களுக்கு அடிப்படி அறிவுப்பற்றாக்குறை இருப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த மொக்கைகள் திருந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
29-ஏப்-202217:15:42 IST Report Abuse
Visu Iyerதிராவிடம் என்று எதை அல்லது யாரை சொல்றீங்க தெளிவாக சொல்லுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X